Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் செல்ஃபி!

பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டதாக சர்ச்சை வெடித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், ஆல்வார் என்ற பகுதியில் வரதட்சணையாக 51 ஆயிரம் ரூபாய் தரவில்லையென பெண்ணை, அவரது கணவரே தனது இரு சகோதரர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அந்த பெண்ணின்  கையில்  வரதட்சணை பாக்கியுள்ளதாகவும் எழுதியுள்ளனர். இந்த சம்பவம் கடந்த 3 நாட்களாக ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில், கடந்த ஜுன் 29 ம் தேதி அந்த பெண்ணை போலீஸ் நிலையத்தில் ராஜஸ்தான் மாநில மகளிர் ஆணையத் தலைவர் சுமன் சர்மா மற்றும் அதன் உறுப்பினர் டாக்டர் சவும்யா குர்ஜார் ஆகியோர் சந்தித்துள்ளனர்.

அப்போது அந்த பெண்ணுடன் அவர்கள் செல்ஃபி எடுத்துள்ளனர். மேலும் வாட்ஸப்பிலும் அதனை வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த புகைப்படம் சோஷியல் மீடியாக்களில் பரவி சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஏற்கனவே மனம் நொந்து போயுள்ள அந்தப் பெண்ணின் கையை காட்டச் சொல்லி, செல்ஃபி எடுத்துள்ளனர். பெண்ணை பாதுகாக்க வேண்டியவர்களே, ஆறுதல் சொல்லி தேற்ற வேண்டியவர்களே அந்த பெண்ணை  அவமானப்படுத்தும் வகையில் நடந்த கொண்டதாக கடும் கண்டனம் எழும்பியது. இதையடுத்து ராஜஸ்தான் மாநில மகளிர் ஆணையத் தலைவர் சுமன் சர்மா விளக்கமளிக்க வேண்டுமென்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ராஜஸ்தானை பொறுத்தவரை, மனைவியை கணவர் கட்டாயப்படுத்தி உறவு கொண்டால் வழக்குப்பதிவு செய்வதில்லை. இந்த விவகாரத்தில் நடந்த ஒரே நல்ல விஷயம், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட அந்த 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்ததுதான்.

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ