Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினியை புதுச்சேரி நல்லெண்ணத் தூதராக நியமிக்க வேண்டும்! - ஆளுநர் கிரண்பேடி விருப்பம்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்கு நல்லெண்ணத் தூதராக ரஜினியை நியமிக்க வேண்டும் என தனது ட்விட்டர்  தளத்தில் புதுவை மாநில ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'கபாலி'. இந்த படத்தில் இளமையான தோற்றத்திலும், வயதான தோற்றத்திலும் ரஜினி நடித்துள்ளார்.  அடுத்த மாதம் (ஜூலை) வெளியாக உள்ள அப்படம், அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து புதுச்சேரி மாநில ஆளுநர் கிரண்பேடி தனது ட்விட்டர் பக்கத்தில், '' கபாலி படத்தின் டிக்கெட்டுகளை பொதுச் சேவையில் ஈடுபடும் மக்களுக்கு பரிசாக வழங்கி, அவர்களை ஊக்கப்படுத்த, மாவட்ட ஆட்சியர் திட்டமிட்டிருக்கிறார்'' என குறிப்பிட்டிருந்தார். இதற்கு பல்வேறு  தரப்பினரும் விமர்சனங்களை பதிவிட்டிருந்தனர்.

அவற்றிற்கு பதிலளிக்கும் வகையில், ''சூப்பர் ஸ்டார் ரஜினியை புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு நல்லெண்ணத் தூதராக நியமிக்க வேண்டும். அதுபோல், தூய்மை இந்தியா பிரசாரத்துக்காகவும், திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு தூதராகவும் நியமிக்க வேண்டும். அவ்வாறு செய்தால், மக்களின் பழைய பழக்கங்களை மாற்றி, புதுச்சேரியை முன்னேற்றலாம்'' என  தெரிவித்துள்ளார்.

புதுவை ஆளுநரின் இந்தப் பதிவு ரஜினி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட கிரண்பேடி, தனது பதவியேற்பு விழாவுக்கு நடிகர் ரஜினிக்கு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close