Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு... நள்ளிரவு முதல் அமல்!

புதுடெல்லி: பெட்ரோல் லிட்டருக்கு 89 பைசாவும், டீசல் லிட்டருக்கு 49 பைசாவும்  நேற்று(வியாழன்) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டு உள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தை விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 15 நாட்களுக்கு ஒருமுறை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.

அதன்படி, பெட்ரோல் விலையை லிட்டருக்கு 89 பைசாவும், டீசல் விலையை லிட்டருக்கு 49 பைசாவும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன. மேலும், இந்த விலை குறைவு  நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ