Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேங்காய் உடைத்து பூஜை: தேஜாஸ் இலகு ரக விமானங்கள் விமானப்படையில் இணைப்பு!

ள்நாட்டுத் தயாரிப்பான தேஜாஸ் இலகு ரக விமானம், முறைப்படி இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளது.  கோவை சூலூர் விமானப்படைத்தளத்துக்கு முதற்கட்டமாக 2 தேஜாஸ் விமானங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கோவை அருகேயுள்ள  சூலூர்  விமானப்படை தளத்திற்கு முதல் கட்டமாக 2 விமானங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே இந்திய விமானப்படையில் உள்ள  பழமை வாய்ந்த, மிக் ரக போர் விமானங்களை அகற்றி விட்டு அதற்கு பதிலாக தேஜாஸ் விமானங்கள் இணைக்கப்படவுள்ளன.

தேஜாஸ் இலகு ரக விமானம் ஒன்றை தயாரிக்க ரூ.150 கோடி தேவைப்படுகிறது. இதில் 65 சதவீத பொருட்கள் உள்நாட்டு தயாரிப்பாகும்.தொலைதூர இலக்கைத் தாக்கும் ஏவுகணைகள், நடுவானில் பெட்ரோல் நிரப்பும் வசதி,  நவீன ரேடார் வசதிகள் இந்த விமானத்தில் உள்ளன.

அடுத்த 6 விமானங்கள் இந்த ஆண்டுக்குள் மற்ற விமானப்படைத் தளங்களில் இணைக்கப்படும்.  20 ஆண்டுக்குள் இந்திய விமானப்படையில் 120 தேஜாஸ் விமானங்கள் சேர்க்கப்படும். ஒற்றை என்ஜின் கொண்ட இந்த விமானங்களை  ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல்  நிறுவனம் தயாரித்து வருகிறது.

தேங்காய் உடைத்து பூஜை

முன்னதாக தேஜாஸ் விமானத்தை  இந்திய விமானப்படையில் இணைப்பதற்கான விழா பெங்களூருவில் பல்வேறு மதப்பிரார்த்தனைகள் மற்றும் பூஜைகளுடன் நடந்தது.

முதல் தேஜாஸ் விமானத்தின் விமானப்படை வீரர்கள் இதில் பங்கேற்று  தேங்காய் உடைத்து, சங்கு ஊதி பூஜை நடத்தினர்.

அதற்கான வீடியோ இங்கே...


 தேஜாஸ் சில தகவல்கள்

கடந்த 1984ம் ஆண்டு முதன் முறையாக இந்த திட்டம் தீட்டப்பட்டடது

1986ம் ஆண்டு தேஜாஸ் தயாரிக்க ரூ. 566 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது.

கடந்த 2001ம் ஆண்டு முதல்  தேஜாஸ் விமானம் தயரானது. முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இந்த விமானத்துக்கு தேஜாஸ் என பெயரிட்டார்.

பல ஆண்டு காலமாகவே இந்திய விமானப்படை பயன்படுத்தி வரும் ரஷ்ய தயாரிப்பான மிக். 21 ரக விமானங்கள் தொடர்ந்து விபத்தை சந்தித்து வந்தன. அதற்கு மாற்றாகத்தான், தற்போது தேஜாஸ் இலகு ரக விமானங்களை தயாரிக்க இந்தியா முடிவெடுத்தது. கூடிய விரைவில் அனைத்து மிக்21 ரக விமானங்களுக்கும் விடை கொடுக்கப்பட்டு விடும்.

இந்த விமானத்தில் வானத்தில் இருந்து வானத்தில் ஏவும் ஏவுகணை, வானத்தில் இருந்து தரையில் வீசப்படும் ஏவுகணை கப்பல்களை அழிக்கும் ஏவுகணை, வெடிகுண்டுகள் இடம்  பெற்றுள்ளன.

இந்த விமானம் 42 சதவீக கார்பன் ஃபைபர் 43 சதவீத அலுமினியம் மற்றும் டைட்டானியம் சேர்ந்த கலவையால் செய்யப்பட்டது. இது ஒரு சிங்கிள் சீட்டர் போர் விமானம். கடற்படைக்காக தயாரிக்கப்படும்  பயிற்சி விமானம் 2 இருக்கைகள் கொண்டது.

அண்மையில் பஹரைனில் நடந்த போர் விமான கண்காட்சியில் தேஜாஸ் பங்கேற்றகது. பாகிஸ்தான் சீன உதவியுடன் தயரித்த ஜே.எப். 17 தண்டர் விமானங்களை விட வானத்தில் வலிமையனானது.

தேஜாஸ் மணிக்கு 2 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் படைத்தது.

தேஜாஸ் விமானத்தை இயக்கிய முதல் விமானி மாதவ் ரங்காச்சாரி, ''நான்காம் தலைமுறை போர் விமானங்களில் தான்  இயக்கிய விமானங்களில் மிகச் சிறந்தது'' என தேஜாசுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ