Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஆடைகளுக்காக ரூ. 75 கோடி செலவிட்டுள்ளார் மோடி!' - ஆம் ஆத்மியின் அடடே கணக்கு!

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த இரு ஆண்டுகளில் ரூ. 75 கோடிக்கு ஆடைகள் வாங்கியிருப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அளித்துள்ள பேட்டியில், ’’ பிரதமர் மோடி ரூ. 2 லட்சம் செலவில் ஒவ்வொரு நிகழ்வுக்கும் உடை வாங்குகிறார். ஒரு முறை அணிந்த உடையைத் திரும்ப அணிவதில்லை. நான் ஒரு கணக்குச்  சொல்கிறேன். மோடியின் ஒரு ஆடையின் செலவு ரூ. 2 லட்சம். ஒரு நாளைக்கு 5 முறை உடைகளை மாற்றுகிறார். அப்படி ஒரு நாளைக்கு 10 லட்ச ரூபாய்க்கு ஆடை அணிகிறார்.

அப்படிப் பார்த்தால் கடந்த 2 ஆண்டுகளில் ரூ. 75 கோடி அவர் உடைகளுக்காகச்  செலவிட்டுள்ளார். என்னிடம் ஒரு மிகப் பெரிய ஆதாரம் உள்ளது. கூகுள் போய் பாருங்கள். மோடி என்று டைப் செய்து, புகைப்படங்களைச்  சோதித்து பார்த்தால், மோடி ஒரு முறை அணிந்த ஆடையை மறுமுறை அணிந்தது போல புகைப்படங்களை பார்க்க முடியாது.

இதுவரை 700 நாட்கள் பதவியில் இருந்திருக்கிறார். அந்த வகையில் 70 கோடி ரூபாய் செலவிட்டுள்ளார். இது தவிர மேலும் 5 கோடி ரூபாய் தனியாகச்  செலவிட்டுள்ளார். ஆம் ஆத்மி கட்சி 566 கோடிக்கு விளம்பரம் செய்துள்ளதாக கூறுவது முற்றிலும் தவறான  தகவல். நாங்கள் வெறும் ரூ. 76 கோடிக்கு மட்டுமே விளம்பரம் செய்தோம். அப்படிப் பார்த்தால், பிரதமர் கடந்த 2 ஆண்டுகளில் 75 கோடி ரூபாய்க்கு உடைகளை எடுத்துள்ளார். இதற்கு பிரதமர் மோடி என்ன சொல்லப் போகிறார் ’’ என கேள்வி எழுப்பியுள்ளார்.



 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ