Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மத்திய அமைச்சரவை நாளை விரிவாக்கம்!

புதுடெல்லி: த்திய அமைச்சரவையில் நாளை புதிய மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

7 மாநில தேர்தலில் வெற்றி பெற திட்டம்...

மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி அமைத்து 2 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் நடைபெற உள்ள உத்திரபிரேதசம், பஞ்சாப் உள்ளிட்ட 7 மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில், மத்திய அமைச்சரவையில் இந்த புதிய மாற்றங்கள் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த 30 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், மத்திய அமைச்சர்களின் செயல்பாடு குறித்து பிரதமர் ஆய்வு மேற்கொண்டார். இதில், அனைத்து அமைச்சர்களின் செயல்பாடுகளையும் மோடி கேட்டறிந்தார். இக்கூட்டத்தில் அமைச்சரவை மாற்றம் குறித்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இதில், பல புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக விரைவில் நடைபெற உள்ள உத்திரபிரேதசம், பஞ்சாப் உள்ளிட்ட 7 மாநிலத் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில், இந்த குறிப்பிட்ட மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் அதிகம் முக்கியத்துவம் வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், புதிய அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களின் துறை மாற்றி அமைக்கப்படவும், சில குறிப்பிட்ட அமைச்சர்கள் நீக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மோடியின் வெளிநாட்டு பயணத்தால் திடீர் மாற்றம்...


வருகின்ற 7-ம் தேதி முதல் பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதனால் மத்திய அமைச்சரவை மாற்றம் தள்ளி வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஜூலை 5-ம் தேதி, நாளையே அமைச்சரவை மாற்றம் செய்யப்படவுள்ளதாக தற்போது டெல்லி வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close