Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சர்ச்சை கருத்து: சல்மானை கண்டிக்கும் அமீர்கான்!

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் போல உணர்ந்ததாக, நடிகர் சல்மான் கூறிய கருத்துக்கு நடிகர் அமீர்கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சுல்தான் திரைப்படத்தில் இடம்பெறும் மல்யுத்தத காட்சிகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த சல்மான் கான், "மல்யுத்த காட்சிகள் குறித்த படப்படிப்பு மிகவும் கடுமையாக இருந்தது.120 கிலோ எடைகொண்ட ஒரு மல்யுத்த வீரரை, 5 விதமான கேமிரா ஆங்கிளில் 10 முறை தூக்க வேண்டி இருந்தது. கிட்டத்தட்ட 7 மணிநேரம் மல்யுத்த காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த படப்பிடிப்பு முடிந்து வெளியேறியவுடன்,  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் போல நடக்க முடியாமல் தவித்தேன். என்னால் சிறிது தூரம் கூட நடக்க முடியவில்லை" என்று தெரிவித்திருந்தார்.

சல்மானின் இந்த கருத்துக்கு பெண்கள் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். சல்மான் மன்னிப்பு கேட்க வேண்டுமென மகளிர் ஆணையம், இரு முறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் சல்மான் இப்போது வரை மன்னிப்புக் கேட்கவில்லை. வழக்கம் போல சல்மான்கானின் தந்தைதான் சல்மான் கருத்துக்கு மன்னிப்பு கேட்டார். இதற்கிடையே மீண்டும் ஜுலை 8ம் தேதி சல்மானுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று மகளிர் ஆணையத் தலைவர் லலிதா குமாரமங்கலம் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் இருந்து நடிகை கங்கனா ராவத் மட்டுமே, சல்மானின் இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். " இப்படியெல்லாம் கருத்து வெளியிட மிக மோசமான மனநிலை கொண்டவரால்தான் முடியும்" என அவர் கண்டித்திருந்தார். மற்றபடி, பாலிவுட்டில் இருந்து சல்மானை கண்டித்து எந்த குரலும் எழவில்லை. இந்த நிலையில் சல்மான்கானின் நண்பர் அமீர்கான், சல்மானின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டங்கல் போஸ்டர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அமீர்கானிடம், சல்மானின் இந்த கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அற்கு பதில் அளித்த அமீர்கான், " சல்மான் இந்த கருத்தை தெரிவித்தபோது நான் இங்கேயில்லை. எப்படியாகினும் இது ஒரு உணர்வற்ற பேச்சு" என்று பதில் அளித்தார். நீங்கள் சல்மானுக்கு அறிவுரை கூறுவீர்களா என்று செய்தியாளர்கள் மீண்டும் அவரிடம் கேட்டனர்.  "அவருக்கு அறிவுரை சொல்ல நான் யார்"  என  செய்தியாளர்களிடம் கேள்வியை திருப்பினார்  அமீர்கான்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close