Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

19 புதிய அமைச்சர்களுடன் மத்திய அமைச்சரவை விரிவாக்கம்: பிரகாஷ் ஜவடேகருக்கு புரமோஷன்!

19 புதிய  அமைச்சர்களுடன் மத்திய அமைச்சரவை  இன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மத்திய இணையமைச்சராக இருந்த பிரகாஷ் ஜவடேகர், தனிப் பொறுப்புடன் கூடிய சுற்றுச்சூழல் அமைச்சராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

பிரதமர் மோடி, தனது தலைமையிலான அமைச்சரவையை இன்று விரிவாக்கம் செய்துள்ளார். அமைச்சரவையில் ஏற்கனவே இருந்த 6 அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதற்கு பதிலாக 19 புது முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. கேபினட் அந்தஸ்த்தில் உள்ள அமைச்சர்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 

இணையமைச்சராக இருந்த பிரகாஷ் ஜவடேகருக்கு கேபினட் அந்தஸ்த்து கொடுக்கப்பட்டுள்ளது. தனிப்பொறுப்புடன் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இலாகாவை அவர் கவனிப்பார்.

புதிய அமைச்சர்கள் இன்று காலை 11 மணியளவில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி மூத்த அமைச்சர்கள் தலைமையில் பதவியேற்றுக் கொண்டனர். இலாக்காக்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

19 புதிய அமைச்சர்கள் யார்?

ஃபாகன் சிங் குலாஸ்தே, எஸ்.எஸ். அலுவாலியா, ரமேஷ் சாந்தப்பா, விஜய் கோயல், ராஜென் கோகென்,அனில் மாதவ் தேவ், பர்சோட்டம் ரூபாலா, எம்.ஜே. அக்பர், அர்ஜுன் ராம் மேக்வால், ஜஷ்வந்த் சிங் பாஷ்வால், மகேந்திரநாத் பாண்டே, அஜய் தம்தா, கிருஷ்ணராஜ், மன்சூக் மாண்ட்வியா, சி.ஆர்.சவுத்ரி, பி.பி. சவுத்ரி,சுபாஷ் பாம்ரே ஆகியோர் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.

இது தவிர பாரதிய ஜனதா கட்சியில் உத்தரபிரதேச கூட்டணி கட்சியான அப்னா தல் கட்சியின் அனுபிரியா சிங் படேல், இந்திய குடியரசுக் கட்சியின் தலைவர் ராமதாஸ் அத்வாலே ஆகியோருக்கும் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ