Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மதம் மாறவில்லை... சுப்ரமண்யன்சுவாமி கருத்துக்கு ஜேசுதாசின் மனைவி மறுப்பு

பிரபல பின்னணி பாடகர் ஜேசுதாஸ் இந்து மதத்துக்கு திரும்பியுள்ளதாக பாரதிய ஜனதா எம்பி சுப்ரமணியன்சுவாமி வெளியிட்ட கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுப்ரமணியன்சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஜேசுதாஸ் தாய் மதமான இந்து மதத்துக்கு திரும்பியுள்ளார். அப்படி திரும்பியிருந்தால் அதனை இந்துக்கள் அனைவரும் வரவேற்கலாம் ' கருத்து வெளியிட்டிருந்தார். ஆனால் சுப்ரமணியன்சுவாமி வெளியிட்ட செய்திக்கு  ஜேசுதாசின் மனைவி பிரபா மறுப்பு தெரிவித்ததோடு 'இது போன்ற செய்திகள் எப்படி பரவுகின்றன என தெரியவில்லை ' என்று  வருத்தம் தெரிவித்திருந்தார்

பிரபா ஜேசுதாஸ் மறுப்பு தெரிவித்ததையடுத்து சுப்ரமணியன்சுவாமி  'தான்  ரீட்வீட் மட்டுமே செய்தாகவும் விஷயம் உண்மையாக இருந்தால் வரவேற்பதாக மட்டுமே கருத்து பதிவிட்டேன். ஆனல்  மீடியாக்கள் எனது ட்வீட்களை தேடி எடுத்து 'ட்விஸ்ட் ' செய்து விடுகின்றன '' என ட்விட்டரில் பதில் அளித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் கொல்லூரில் உள்ள தாய் மூகாம்பிகை கோயிலுக்கு அடிக்கடி செல்லும் பழக்கம் உள்ளவர் ஜேசுதாஸ். ஏராளமான ஐய்யப்பன் பாடல்களையும் பாடியுள்ளார். நாடு முழுவதும் உள்ள இந்து ஆன்மீகத் தளங்களுக்கு சென்று இசை கச்சேரி நடத்தி வருகிறார். ஆனால் ஜேசுதாஸ் பிறப்பால் கிறிஸ்தவர் ஆவார்.  தற்போது 76 வயதான ஜேசுதாஸ்,14 மொழிகளில் 45 ஆயிரம் பாடல்களைப் பாடியுள்ளார். பத்ம ஸ்ரீ, பத்மவிபூசன் விருதுகளைப் பெற்றுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close