Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராஜஸ்தானில் அரசே நடத்தும் 'மலிவு விலை 'மளிகை கடைகள்!

ராஜஸ்தானில் அரசே நடத்தும் மளிகை கடைகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி விட்டது. ஆகஸ்ட் 15 ம் தேதிக்குள் இவற்றின் எண்ணிக்கை 5 ஆயிரமாக உயர்த்தப்படவுள்ளது.

ராஜஸ்தானில்,  பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. வசுந்தரா ராஜே முதல்வராக இருந்து வருகிறார். பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் வசுந்தரா ராஜேவின் அரசு, தற்போது மலிவு விலையில், மளிகை பொருட்களை மக்களுக்கு வழங்கத் விற்கத் திட்டமிட்டுள்ளது.  இதற்காக  அரசு சார்பில் மளிகைக் கடைகள் மாநிலம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.  'அன்னபூர்ணா பண்டார் யோஜ்னா ' என்ற திட்டத்தின் கீழ், 'வில்லேஜ்மால்ஸ்' என இந்தக் கடைகளுக்கு பெயரிடப்பட்டுள்ளது.

தற்போது பெரும்பாலான கிராமங்களில், ரேசன் கடைகளே வில்லேஜ் மால்களாக  மாற்றப்பட்டுள்ளன. ராஜஸ்தான் முழுவதும் 'வில்லேஜ் மால்ஸ்' கடைகள்  ஒரே வர்ணத்தில் காணப்படும். மாநிலம் முழுவதும் இந்த கடைகளை மிக விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நேற்று ஒரே நாளில் மட்டும்  மாநிலம் முழுவதும் 150 வில்லேஜ் மால்கள் திறக்கப்பட்டன. தற்போது இந்த கடைகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது. வரும் ஆகஸ்ட் 15 தேதிக்குள்,  5 ஆயிரம் கடைகளை திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக ஃப்யூச்சர் கன்ஸ்யூமர்ஸ் நிறுவனத்துடன் ராஜஸ்தான் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிறுவனமே வில்லேஜ்மால்களுக்கு   தரமான பொருட்களை வழங்குகிறது. இதனால் பொருட்களை நியாயமான விலைக்கும் விற்க முடிகிறது.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ