Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகீதின் தலைமை கமாண்டர் புர்கான் சுட்டுக் கொலை

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகீதின் தலைமை கமாண்டர் புர்கான் வானி ரணுவத்தினருடன் நடந்த சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

21 வயதே நிரம்பிய இவர் தான் அந்த இயக்கம் நடத்திய பல தாக்குதல்களுக்கு மூளையாக இருந்தவர்.  புர்கானின் தலைக்கு ரு.10 லட்சம் என அறிவிக்கப்பட்டிருந்தது. காஷ்மீரின் அனாந்தாக் மாவட்டத்தில் பும்துரா கிராமத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில்  புர்கானுடன் சேர்த்து மேலும் இருவர்  மத்திய   பாதுகாப்பு படையினரால்  சுட்டுக்  கொல்லப்பட்டுள்ளனர்.

பள்ளித் தலைமையாசிரியரின் மகனான புர்கான் 8ம் வகுப்புத் தேர்வில் 90 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்.  ஆனால் 10ம் வகுப்புப் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு துப்பாக்கியை கையில் எடுக்கத் தொடங்கியுள்ளார்.   புர்கான் கொல்லப்பட்ட செய்தி பரவியதும் ஸ்ரீநகரில் ஏராளமானோர் திரண்டு, போலீசார் மீது கற்களை எறிந்து தாக்கினர். இதனால் அங்குப் பதற்றம் நிலவுகிறது. அத்துடன் அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான அமர்நாத் யாத்ரீகர்கள் தவித்து வருகின்றனர்.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close