Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மோடியின் 78 அமைச்சர்களில் 72 பேர் குரோர்பதிகள்!

ண்மையில் பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார். 5 அமைச்சர்கள் நீக்கப்பட்டு, 19 பேர் புதியதாக சேர்க்கப்பட்டனர். தற்போது மத்திய அமைச்சர்களின் எண்ணிக்கை  78 ஆக உயர்ந்துள்ளது.  

புதிய அமைச்சர்களில் மத்திய பிரதேத்தை சேர்ந்த எம்.ஜே. அக்பரின் சொத்து மதிப்புரூ. 44. 90 கோடி ஆகும். தொடர்ந்து  பி.பி. சவுத்ரி ரூ.35.35 கோடிக்கு சொத்து வைத்துள்ளார். விஜய் கோயல் 29.90 கோடிக்கு சொத்து வைத்துள்ளார்.  மொத்தத்தில்  புதியதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட அமைச்சர்களின் சராசரி சொத்து மதிப்புரூ. 8.73 கோடி ஆகும். புதிய அமைச்சரவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் சிந்தியா குறைந்த சொத்து மதிப்பு கொண்டவர். இவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.60.97 லட்சம்தான். புதிய அமைச்சர்களில் 12 பேர் ஒரு கோடிக்கு மேல் சொத்து மதிப்பு கொண்டவர்கள்.

இப்போதுள்ள 78 மத்திய அமைச்சர்களில் நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு அதிகபட்சமாக ரூ.113 கோடிக்கு சொத்து உள்ளது. இவருக்குதான் இந்த பட்டியலில் முதலிடம்.உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சர்  ஹர்சிம்ரத் கவுர் பாதல் ரூ.108 கோடி சொத்து மதிப்புடன் 2வது இடத்தில் இருக்கிறார். எரிசக்தித்துறை அமைச்சர் பியூஸ் கோயல்,ரூ. 95 கோடி சொத்து மதிப்புடன் 3வது இடத்தை பெற்றுள்ளார்.

மொத்த 78 மத்திய அமைச்சர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.12.94 கோடி ஆகும்.  மோடியின்  அமைச்சரவையில் 78 பேரில் 24 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.  அமைச்சர்களில் 31 முதல் 40 வயதுக்குள் 31 பேர் உள்ளனர். 41 முதல் 60 வயது கொண்டவர்கள் 31 பேர் இடம் பெற்றுள்ளனர். பள்ளி படிப்பு அதற்கும் குறைவாக படித்தவர்களின் எண்ணிக்கை 14 பேர். பட்டதாரிகள் முதுநிலை பட்டதாரிகள் 63 பேர். 9 பெண் அமைச்சர்களும் இடம் பெற்றுள்ளனர்.

டெல்லியை சேர்ந்த திங் அண்டு தேங்க் நிறுவனம் செய்த ஆய்வில் இந்த விவரங்கள் தெரிய வந்துள்ளன. 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close