Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கெஜ்ரிவாலின் முதன்மைச் செயலாளரை சிக்க வைத்த ஆடியோ பேச்சு

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முன்னாள் முதன்மைச் செயலாளர் ராஜேந்திர குமார் ஊழல் வழக்கில் சி.பி.ஐயால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் லஞ்சம் பெறுவது தொடர்பாக சில ஆடியோ கிளிப்புகளை ஆய்வு செய்ததில்  ராஜேந்திர குமாரின் 'வாய்ஸ் 'உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 

தனியார்  நிறுவனமான என்டோவர் சிஸ்டம் பிரைவேட் நிறுவனத்துக்கு  ரூ.57 கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்களை டெல்லி மாநில அரசு வழங்குவதற்கு ராஜேந்திர குமார் லஞ்சம் பெற்றதாக சிபிஐ குற்றஞ்சாட்டி இருந்தது.  ராஜேந்திர குமாரின் ஆடிட்டர் அமித்குமார், ராஜேந்திரகுமாருக்கு பதிலாக லஞ்ச பணத்தை பெற்றதாகச் சொல்லப்பட்டது

டெல்லி, நொய்டா, ஆக்ரா உள்ளிட்ட 6 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி, ஏராளமான ஆடியோ கிளிப்புகளையும் கைப்பற்றியது. அமித்குமாரின் வீட்டில் இருந்தும்  ரூ. 27 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. ஆடியோ கிளிப்புகளில்  இருப்பது ராஜேந்திர குமாரின் வாய்ஸ்தானா? என்பதை உறுதி செய்வதற்காக டெல்லியில் உள்ள மத்திய தடவியல் ஆய்வு மையத்தில் சோதனை நடத்தப்பட்டது. 

ஆடியோ  பதிவுகளில் பேசியிருப்பது  ராஜேந்திரகுமார்தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்த வழக்கு தொடர்பாக  கடந்த திங்கட்கிழமை, கெஜ்ரிவாலின் முன்னாள் முதன்மைச் செயலாளர் ராஜேந்திரகுமார்,  துணை முதன்மைச் செயலாளர் தருண் சர்மா ஆகியோரை சி.பி.ஐ கைது செய்திருந்தது.  என்டோவர் நிறுவனத்தின் இயக்குனர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ