Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவின் சிக்ஸ்பேக் திருநங்கைகள் குழுவுக்கு கென்னஸ் கிரியேட்டிவிட்டி விருது

ந்தியாவின் முதல் திருநங்கைகள் நடனக்குழுவான சிக்ஸ்பேக் சிறந்த கிரியேட்டிவிட்டிக்கான கென்னஸ் லயன்ஸ் சர்வதேச விருதை வென்றுள்ளது. ரவீனா, ஆஷா, ஃபீடா, கோமல், சாந்தினி, பாவிகா என 6 திருநங்கைகள் அடங்கிய குழு, இந்த மகத்தான சாதனையைப் படைத்துள்ளது. 'சபு ரபுரே பந்தே '(அனைவரும் பந்தம் கொண்டவர்கள்தான்)  என்ற ஆல்பத்தில்  சோனு நிகமுடன் இவர்கள் 6 பேரும் சேர்ந்து ஆடி பாடியிருந்தனர். அந்த ஆல்பத்துக்குதான் கவுரவமிக்க இந்த விருது கிடைத்துள்ளது.
         
உலகம் முழுக்க ஆயிரம் பேர் இந்த விருதுக்கு போடியிட்டனர். இந்தியாவில் இருந்து 4 ஆல்பங்கள் போட்டியில் இருந்தன. அவற்றையெல்லாம் முறியடித்து சிக்ஸ்பேக் குழு விருதை வென்றுள்ளது. 

இந்த திருநங்கைகள் நடனக் குழு கடந்த 9 மாதங்களுக்கு முன்தான் ஆரம்பிக்கப்பட்டது. இந்தக் குழுவினர் முதன்முதலாக இயற்றி பாடிய,' ஹம் ஹெயின் ஹேப்பி ' ஆல்பத்தை வெளியிட்ட சில நாட்களில் 14 லட்சம் பேர்   யூ டியுப்பில் பாத்திருந்தனர்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ