Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காஷ்மீர் கலவரம் எதிரொலி... அமர்நாத் யாத்திரை சென்ற தமிழக பக்தர்கள் தவிப்பு!

ஜம்மு: காஷ்மீர் கலவரம் காரணமாக, அமர்நாத் ஆன்மீக யாத்திரை சென்றுள்ள ஆயிரக்கணக்கான தமிழக பக்தர்கள் அடிப்படை வசிதியின்றி தவித்து வருகின்றனர்.

இமயமலையில் அமைந்துள்ள அமர்நாத் குகை கோயிலில், கடந்த 2-ம் தேதி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் யாத்திரை தொடங்கியது. பனிலிங்க வடிவில் தரிசனம் தரும் சிவபெருமானை தரிசிக்கும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் குறிப்பிட்ட 48 நாட்களைத் தவிர்த்து மற்ற நாட்களில் வருடந்தோறும் இக்கோயில் பனியால் மூடப்பட்டே இருக்கும். அதனால், பனி இல்லாத இந்த குறிப்பிட்ட கால இடைவேளையில் மட்டுமே சிவ தரிசனம் கிடைக்கும்.

ஆகஸ்ட் 18-ம் தேதி வரை இந்த யாத்திரை நடைபெற உள்ளதால், தமிழகத்தில் இருந்து சுமார் 5 ஆயிரம் பக்தர்களும், இன்னும் பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் காஷ்மீருக்கு வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் தளபதியான பர்கான் வானி, இந்திய பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஷ்மீர் மாநிலம் முழுவதும் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் சில பிரிவினைவாத அமைப்புகள் கலந்துகொண்ட நிலையில், திடீரென்று கலவரமாக மாறியது. சில இடங்களிகல் காவல் நிலையங்கள் சூறையாடப்பட்டன.

இதையடுத்து, போராட்டத்தைக் கட்டுப்படுத்த ராணுவனத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். போராட்டத்தைக் கட்டுப்படுத்த காஷ்மீரில் சில இடங்களில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இதனால், அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமர்நாத் யாத்திரை சென்றுள்ளனர். திடீர் கலவரத்தால் அவர்கள் உரிய இருப்பிட வசதியின்றி ராணுவ முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு போதிய உணவு, தண்ணீர், கழிப்பிட வசதிகள் இல்லாமல் அவர்கள் அனைவரும் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். செல்போன் சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளதால், தங்களது உறவினர்களைத் தொடர்பு கொள்ள முடியாமலும், பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

குறிப்பாக, தமிழக பக்தர்களில் அதிக முதியவர்களாக உள்ளதால், அவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். யாத்திரையைத் தொடரவும் முடியாமல், தமிழகம் திரும்பவும் முடியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர். இதனால், அமர்நாத் யாத்திரை சென்றுள்ள பக்தர்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

இதனிடையே, காஷ்மீரில் விரைவில் அமைதி திரும்பும் என, அம்மாநில முதல்வர் மெகபூபா நம்பிக்கை தெரிவித்துள்ளார். அத்துடன் கூடுதலாக ராணுவமும், மத்திய ரிசர்வ் போலீசாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டு, காஷ்மீரில் அமைதி திரும்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close