Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'No more 50': மிருகவதைக்கு எதிரான தண்டனையை கடுமையாக்க கோரும் பிரபலங்கள்!

 

வியாழன் அன்று பல பிரபலங்களும், பிரமுகர்களும் இணைந்து, "No more 50"  என்ற பிரசாரத்தைத் தொடங்கி வைத்தனர். மிருகங்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுபவர்களுக்கு, தற்போது வெறும் ரூ.50 தான் அபராதம். இந்த 50 ரூபாய், ஒரு கோலா பாட்டிலின் விலை. இதுதான் தற்போது ஒரு உயிரின் விலை.

மிருகங்களை என்ன செய்தாலும், இந்த தொகையை அபராதமாகச் செலுத்தி விட்டு தப்பித்து விடலாம். இதை தடுத்து, குற்றவாளிகள் தப்பிக்காமல் இருக்கவே இந்த பிரசாரம்.

1960 ம் ஆண்டின், மிருக வதைத் தடைச் சட்டத்தின் (Prevention of Cruelty to Animals Act) கீழ் உள்ள தண்டனையை அதிகரிக்குமாறு சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் நடத்திய விழிப்பு உணர்வு முகாமிலும், விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையிலும் உஷா உதுப், சுதேஷ் போஸ்லே, அனுப் ஜலோதா, தாரா ஷர்மா போன்ற பிரபலங்களின் விழிப்பு உணர்வு வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. #NoMore50 எனும் விழிப்பு உணர்வு முகாம் Humane Society International/India and People for Animals என்ற அமைப்பால் நடத்தப்பட்டது.

 

திரையுலக நட்சத்திரங்களான நாகார்ஜுனா மற்றும் அவரது மனைவி அமலா இதில் கலந்து கொண்டனர். மேலும், பல கட்சிகளைச் சார்ந்த தலைவர்களான சசி தரூர், டாக்டர் சத்யபால் சிங், வருண் காந்தி, மீனாக்‌ஷி லெஹி உள்ளிட்ட  பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

HSI ன் உறுப்பினர் நரசிம்ஹா கூறுகையில், "மிருகங்களை துன்புறுத்துதல் மற்றும் கொலை செய்தல் ஆகிய குற்றங்களுக்கு,  மிருக வதைத் தடை சட்டத்திற்குக் கீழான தண்டனையோ அபராதமோ திருத்தியமைக்கப்படவில்லை. இதனால், மிருகங்களைக் கொடுமை செய்பவர்கள் பயமில்லாமல், தாங்கிக் கொள்ள முடியாத அளவு மிருகங்களை துன்புறுத்துகின்றனர். தற்போது உள்ள நிலையில், மிருகங்களை உச்சபட்சமாகக் கொடுமைப்படுத்தினாலும், அதற்கான அபராதம் வெறும் ரூ.50 தான்!"  என்றார்.

மேலும், HSIன் இயக்குநர், ஹரீஷ் ஐயர், "அனைத்து தர மக்களும் மிருக வதைக்கு எதிராகக் குரல் கொடுப்பது எங்களுக்கு மிகப் பெரிய நம்பிக்கையையும் பலத்தையும் தந்துள்ளது. மிருக வதை தடைச் சட்டத்தில் தற்போதுள்ள எந்த அபராதமும் தண்டனையும் மிருகங்களைக் காக்க பயன்படவில்லை. தற்போதுள்ள இந்த ஆதரவால் நிச்சயமாக மாற்றத்தைக் கொண்டு வரலாம்!" என்று நம்பிக்கையாக பேசினார்.

#NoMore50 என்பது நிச்சயமாக நாம் அனைவரும் ஆதரிக்க வேண்டிய ஒரு விஷயம். மாபெரும் ஜனநாயக நாட்டில், ஒரு உயிரின் மதிப்பு வெறும் ரூ.50 என்பதை ஒப்புக்கொள்ள மனம் இடம் தரவில்லை. தங்கள் ஆதரவைத் தெரிவிக்க விரும்புபவர்கள் #NoMore50 என்ற இணைப்போடு மிருக வதைக்கு எதிரான தங்கள் கருத்துக்களை ஏந்திய பலகையோடு உள்ள புகைப்படங்களையோ, வீடியோக்களையோ, முகநூலில் ஒரு ஸ்டேட்டஸோடு போடலாம். சிறு துளி பெரு வெள்ளம் என்பதைப் போல நம் சிறு செயல் நிச்சயமாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

#Nomore50 கான பிரபலங்களின் வீடியோக்கள்:
 
உஷா உதுப்:
 

 

ரேடியோ சிட்டி சுசாரிதா:

 

 

தாரா ஷர்மா:

 

 

சுதேஷ் போஸ்லே:

 

 

அம்பாலி மேனன்:

 

- ந. ஆசிபா பாத்திமா பாவா
(மாணவப் பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ