Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முறைகேடு நடந்ததா? என விசாரணை நடத்துங்கள்! - மத்திய அரசுக்கு சிசோடியா சவால்

புதுடெல்லி: டெல்லியின் கிச்ரிபூர் பகுதியில் ஆம் ஆத்மி அரசால் புதிய பள்ளி ஒன்று கட்டப்பட்டது குறித்து சி.பி.ஐ., ஏ.சி.பி., சி.ஏ.ஜி. மூலம் விசாரணை நடத்திக் கொள்ளுங்கள் என்று மத்திய அரசுக்கு துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சவால் விடுத்துள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முதன்மைச் செயலராக இருந்த ராஜேந்திர குமார், ஊழல் வழக்கில் சி.பி.ஐ.யால் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அதேபோல, பாலியல் துன்புறுத்தல் உள்பட பல்வேறு புகார்களின் அடிப்படையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து, மத்திய விசாரணை அமைப்புகளை தங்களுக்கு எதிராக மத்திய அரசு பயன்படுத்துவதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டி வருகிறது. மேலும், சி.பி.ஐ., டெல்லி காவல்துறை, லஞ்ச ஒழிப்பு துறை ஆகிய விசாரணை அமைப்புகள், ஆம் ஆத்மி தலைவர்களுக்கு எதிராக சதி செய்து, அவர்களை கைது செய்வதையே பணியாக கொண்டு செயல்படுகின்றன என்று மணீஷ் சிசோடியா கடந்த ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டி இருந்தார்.

இந்நிலையில், டெல்லியின் கிச்ரிபூர் பகுதியில் ஆம் ஆத்மி அரசால் புதிய பள்ளி கட்டப்பட்டது அந்த புதிய பள்ளி கட்டடத்தை நேற்று திறந்து வைத்தப் பின்னர் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தனது சுட்டுரை பதிவில், ;;கிச்ரிபூர் பகுதியில் புதிய பள்ளியொன்றை டெல்லி அரசு கட்டியுள்ளது. இதில் முறைகேடு எதுவும் நடந்ததா? என்பது குறித்து சி.பி.ஐ., ஏ.சி.பி. (டெல்லி லஞ்ச ஒழிப்புத் துறை), சி.ஏ.ஜி. (தலைமை கணக்குத் தணிக்கையாளர்) மூலம் நீங்கள் (மத்திய அரசு) விசாரணை நடத்துங்கள்' என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close