Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

''இலக்கை அடைந்து விட்டோம் தேட வேண்டாம் ''-ஐஎஸ்சில் இணைந்த கேரள வாலிபர் மெஸ்சேஜ்

ஐஎஸ் குழுவில் இணைந்ததாகக் கருதப்படும் கேரள வாலிபர் ஒருவர் இலக்கை அடைந்து விட்டதாகத் தனது குடும்பத்திற்கு ஆடியோ மெஸ்சேஜ் அனுப்பியுள்ளார்.

கேரளத்தில் இருந்து 20க்கும் மேற்பட்டவர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ். குழுவில் இணைந்துள்ளதாக தகவல் பரவியுள்ளது. இந்த நிலையில், காசர்கோட்டை சேர்ந்த இஜாஸ் அகமது என்ற டாக்டர், தனது குடும்பத்திற்கு ஆடியோ மெஸ்சேஜ் ஒன்றினை அனுப்பியுள்ளார்.

அதில், ''நாங்கள் இலக்கை அடைந்து விட்டோம். இனிமேல் திரும்பும் எண்ணம் இல்லை. எங்களை பற்றி இனி நீங்கள் கவலைப்பட வேண்டாம். போலீசில் புகார் அளித்தால் அது உங்களுக்கு பிரச்னையை ஏற்படுத்தும். எனவே அதனை செய்ய வேண்டாம்'' என கூறியுள்ளார்.

இஜாஜ் அகமது சீனாவில் மருத்துவம் படித்தவர். கோழிக்கோடு மாவட்டம் வடகரா என்ற இடத்தில் உள்ள தனியார் மருத்துவமைனையில் பணிபுரிந்து வந்தார். கடந்த இரு மாத காலமாக விடுப்பில் இருந்தாகவும் பணிக்கு வரவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

இதற்கிடையே கேரள சட்டசபையில் பேசிய முதல்வர் பினராயி விஜயன் ,  ''காசர்கோடு, பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த 21  பேர் இதுவரை ஐ.எஸ்.அமைப்பில்  இணைந்துள்ளதாகத் தகவல் இருக்கிறது. 4 பெண்களில் இருவர் கர்ப்பிணிகள். 3 குழந்தைகளும் அவர்களுடன் சென்றுள்ளனர் ''என்றார்.

இந்நிலையில், காணாமல் போனவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பிரோஷ்கான் என்பவர் மும்பை விமான நிலையத்தில் பிடிபட்டுள்ளார். அவரிடம் தற்போது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காணாமல் போன அனைவரும்  பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் படித்தவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ