Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்: வழக்கு அரசியல் சட்ட அமர்வுக்கு மாற்றப்படுகிறது!

 

பரிமலை அய்யப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கக் கோரும் வழக்கை அரசியல் சட்ட அமர்வுக்கு மாற்ற வாய்ப்பு இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10-வயதுக்கு உட்பட்ட சிறுமிகளும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுமே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால், 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதனால், அனைத்துப் பெண்களையும் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று கோரி, இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுத்தனர். 

இந்த வழக்கு, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சி.நாகப்பன், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரிணைக்கு வந்தது. இவ்வழக்கில்,  சபரிமலை கோயிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவஸ்தானம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், ‘பல்லாண்டு கால மத நம்பிக்கையில் நீதிமன்றம் தலையிடுவது, அந்த நம்பிக்கைக்கு இழைக்கப்படும் அநீதி' என்று வாதிட்டார். 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, "கோயில் என்பது பொதுவான ஆன்மிக தலம். அங்கு வரும் பெண்களுக்கு அனுமதி மறுக்க முடியாது. அரசியல் சட்டத்தில் பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, அவர்களுக்கு அனுமதி மறுப்பது, அடிப்படை உரிமைகளை மீறும் செயல். 

இந்தப் பிரச்னையின் தீவிரத்தன்மையை நீதிமன்றம் புரிந்துகொண்டுள்ளது. அதனால், இந்த வழக்கு அரசியல் சட்ட அமர்வுக்கு மாற்றப்பட வாய்ப்பு இருக்கிறது. அப்படி மாற்றப்படும் பட்சத்தில், இவ்வழக்கில், விரிவான உத்தரவைப் பிறப்பிப்போம்" என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 7 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய கருத்தால், திருவாங்கூர் தேவஸ்தானம் அதிர்ந்துபோய் உள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ