Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பணிக்கு தாமதமாக வந்தால்.... மின்சாரத்துறை ஊழியர்களை எச்சரிக்கும் முதல்வர் நாராயண சாமி!

புதுச்சேரி: மின்சாரத் துறை அதிகாரிகள், ஊழியர்கள் பணிக்கு தாமதமாக வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் நாராயண சாமி எச்சரித்து உள்ளார்.

புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி, இன்று தலைமை மின்பொறியாளர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் அதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''கூடங்குளம் அணு உலையில் இருந்து புதுச்சேரிக்கு 66 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.

புதுச்சேரி மின்சாரத்துறையில் 50 சதவீத ஊழியர்கள் சரியான நேரத்துக்கு அலுவலகத்துக்கு வருவதில்லை என கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இனி மின்சாரத் துறை அதிகாரிகள், ஊழியர்கள் பணிக்கு தாமதமாக வந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், மின்சாரத் துறை ஊழியர்களுக்கு ஸ்மார்ட் கார்டு திட்டத்தை செயல்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ