Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாஜக எம்எல்ஏ தாக்கியதில் இறந்த சக்திமான் குதிரை சிலை அகற்றம்

த்தரகாண்ட் மாநிலம்,  டேராடூன் நகரில் அமைக்கப்பட்டிருந்த சக்திமான் சிலை இன்று காலை அகற்றப்பட்டது.
 

டேராடூன் நகரில், கடந்த ஏப்ரல் மாதம் பாரதிய ஜனதா கட்சியின் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தை அடக்க போலீசார் முயன்றனர். அப்போது போலீஸ் குதிரை சக்திமானின் கால்களில்,     கணேஷ் ஜோஷி என்ற பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ தொடர்ந்து தாக்கினார்.

இதனால்  சக்திமான் குதிரையின் இடது பின்னங்கால் உடைந்தது. இச்சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முதல்வர் ஹரிஷ் ராவத்தின் உத்தரவின் பேரில் குதிரைக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டு, செயற்கை கால்கள் கூட பொருத்தப்பட்டன. எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் அந்த குதிரை இறந்த போனது. போலீஸ் துறையில் 14 ஆண்டுகள் சேவையாற்றியிருந்த அந்த குதிரை,  முழு போலீஸ் மரியாதையுடன் அடக்கம்  செய்யப்பட்டது.

இந்நிலையில், சக்திமானின் சேவையை கவுரவிக்கும் வகையில், கடந்த 4 நாட்களுக்கு முன்  டேராடூன் நகரின் முக்கியப் பகுதியில் குதிரைக்கு சிலை நிறுவப்பட்டது. வெள்ளை நிறத்தில் சக்திமான் சிலை கம்பீரமாக காணப்பட்டது. இந்த நிலையில்  இன்று காலை திடீரென்று அந்த சிலை அகற்றப்பட்டு விட்டது. இது குறித்து உத்தரகாண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத் கூறுகையில், " சக்திமானின் சிலையை மீண்டும் நிறுவுவது குறித்து அடுத்து வரும் அரசின் முடிவுக்கு விட்டு விடுகிறேன் ''என்றார்.

ஆனால் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் நாட்டுக்காக உயிரிழந்துள்ள நிலையில்,  ஒரு குதிரையை வைத்து முதல்வர் ஹரிஷ் ராவத் அரசியல் செய்வதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்தே சக்திமானின் சிலை அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. குதிரையை தாக்கி அதன் இறப்புக்கு காரணமான கணேஷ் ஜோஷி,  தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார்.


 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ