Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது ஏர் கன் தாக்குதல்: 92 பேர் கண்பார்வை பாதிப்பு!

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் முக்கிய தலைவராக இருந்த புர்ஹான் வானி கொல்லப்பட்டதை அடுத்து  அங்கு கலவரம் வெடித்தது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் 'ஏர் கன்'னால் தாக்குதல் நடத்தியதில் 92 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 19  பேருக்கு பார்வை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2010 ம் ஆண்டு, காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 112 பேர் பலியாகினர். இதையடுத்து அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான  அரசு,  உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் ஏர் துப்பாக்கியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது. சிறிய அளவிலான இதன் குண்டுகள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்காது. இந்த குண்டு கண்ணில் பட்டால் பார்வை பறிபோகும் அபாயம் உள்ளது.

இந்த நிலையில் புர்ஹான் கொல்லப்பட்டதையடுத்து கடந்த 4 நாட்களாக காஷ்மீரில் வன்முறை வெடித்துள்ளது. போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்தும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.  இதுவரைக்கும் 30 போராட்டக்காரர்கள் இறந்துள்ளனர். பெரும்பாலும் பாதுகாப்புப் படையினர் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் 'ஏர் கன்'னைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் கண்களில் குண்டு பட்டு பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

ஸ்ரீநகர் எஸ்.எம்.ஹெச்.எஸ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில்  92 பேருக்கு கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள். இதில் 19 பேருக்கு, பார்வை முற்றிலும் இழக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மருத்துவமனையில்  ஒரு மணி நேரத்துக்கு ஒரு அறுவை சிகிச்சை  நடந்து வருகிறது. தற்போது ஆபரேசன் தியேட்டரையே மருத்துவமனை நிர்வாகம் மூடிவிட்டது.  ஏர் கன்னால் பாதிப்புக்குள்ளானவர்கள் தொடர்ந்து மருத்துவமனைக்குள்   வந்து கொண்டேயிருப்பதாக  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

எடிட்டர் சாய்ஸ்