Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிளாஸ்டிக் தேசியக்கொடி...குட் பை சொல்கிறது கேரளா! #WhereIsMyGreenWorld

திருவனந்தபுரம்: பிளாஸ்டிக்கால்  ஆன தேசியக் கொடிகளை பயன்படுத்துவது, விற்பனை செய்வது, கொள்முதல் செய்வது உள்ளிட்டவைகளுக்கு கேரள அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது.

வரும் ஆகஸ்ட் மாதம் 15 ந்தேதி நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக கேரளாவில் எளிதாக பயன்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் கொடிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கேரள அரசு பிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்த தடைவிதித்துள்ளது.  சுதந்திர தினம் மட்டுமின்றி குடியரசு தினம், தேசியத் தலைவர்கள் நினைவு தினங்கள் போன்ற நாட்களில் தேசிய கொடிகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளதால், சிறிய அளவிலான பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்படும் மூவர்ண தேசியக் கொடி அதிகளவில் விற்பனைக்கு வருகிறது.

ஏற்கனவே பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் குடியரசு தின, சுதந்திர தின விழாக்களுக்குப் பிறகு, அதிகளவு மக்களால் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கால் ஆன இந்த தேசியக் கொடிகள், சாலைகளிலும், வடிகால்களிலும் தூக்கி வீசப்படுகின்றன. இதனால் சுற்றுப்புறச்சூழல் சீர்கேடு அடைவதாக அங்குள்ள சுற்றுச்சூழலியலாளர்கள் புகார் தெரிவித்துவந்தனர்.

இந்நிலையில் கேரளாவில் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்படும் தேசியக் கொடிகளை பயன்படுத்துவது, விற்பனை செய்வது, கொள்முதல் செய்வது ஆகியவற்றுக்கு அம்மாநில அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் பிளாஸ்டிக் கொடிகளுக்கு மாற்றாக கம்பளி, காகிதம், பருத்தி, காதி மற்றும் பட்டு ஆகியவற்றில் தயாரிக்கப்படும் தேசியக் கொடிகளை பயன்படுத்துமாறும் அரசு, பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக கேரளாவை மாற்ற, பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாமல் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு 20 சதவீத வரி விலக்கு அளிக்கப்படும் என கேரள அரசின் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்திலும் இப்படி ஓர் அறிவிப்பு வருவது சுற்றுச்சூழலுக்கு நல்லது என்கிறார்கள் சுற்றுச் சூழலியலாளர்கள்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ