Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவின் சூப்பர் முதல்வர் இவர்தானாம்!

ந்தியாவின் சூப்பர்  முதல்வர்கள் பட்டியலில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முதலிடத்தை பிடித்துள்ளார்.

நாட்டில் மக்களுக்காக செயல்படுத்தும் நலத்திட்டங்களை மையமாக வைத்து, நாட்டின் மிகச்சிறந்த முதல்வர் யார் என்பதை தெரிவு செய்ய பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார். ஐ.பி மற்றும் தனியார் ஏஜென்சிகள் இந்த பணியில் ஈடுபட்டு வந்தன. கடந்த ஏப்ரல் முதல் ஜுன் மாதம் வரையில் ஆய்வு நடத்தப்பட்டது. தற்போது சூப்பர் முதல்வர் யார் என தெரிய வந்துள்ளது.

இந்தப் பட்டியலில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முதலிடத்தை பிடித்துள்ளார். மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் 'பகீராதா' திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் வழியாக தண்ணீர் அளிக்கும் திட்டத்திற்காக, 1.25 லட்சம்  கி.மீ தொலைவிற்கு மாநிலம் முழுவதும் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. சுமார் ரூ. 40 ஆயிரம் கோடி செலவில்,  2018 ம் ஆண்டு இந்தப்பணிகள் நிறைவடையும் போது, நாட்டிலேயே இது மிகப் பெரிய குடிநீர் திட்டமாக இருக்கும்.

அடுத்ததாக,  அனைத்து நீர்நிலைகளையும் தூர்வாரும் பணிகள்  'காகதீயா' என்ற பெயரில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காகரூ. 25 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.  மரம் வளர்க்கும் திட்டமான 'ஹரிதா ஹாரம்' மூலமாக தெலுங்கானாவில் காடுகளின் சதவீதத்தை  27 முதல் 33 சதவீதம் வரை அதிகரிக்க சந்திரசேகர ராவ் திட்டமிடுள்ளார். இது போன்ற மக்கள் நலத்திட்டங்களும்  நேர்மையான உழைப்பும் தற்போது  சந்திரசேகர ராவை சூப்பர் முதல்வராக மாற்றியுள்ளது.

அதே வேளையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 13 வது இடத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதனை ஆந்திர மாநில நிர்வாகம் மறுத்துள்ளது. சந்திரபாபு நாயுடு 5வது இடத்தில் இருப்பதாக அம் மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்தியபிரதேச மாநில முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுகானுக்கு இந்த பட்டியலில் 2வது இடம். சத்தீஸ்கர் மாநில முதல்வர் ரர்மன் சிங்கிற்கு 3வது இடமும், குஜராத் முதல்வர் ஆனந்தி பென் பட்டேலுக்கு 4வது இடமும் கிடைத்துள்ளது. டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு 5வது இடம் என்றும் சொல்லப்படுகிறது.

தமிழக முதல்வரின் பெயர், பட்டியலில் எந்த இடத்தில் இருக்கிறது எனத் தெரியவில்லை. வரும் ஜுலை 16 ம் தேதி பிரதமர் மோடி , டெல்லியில் அனைத்து மாநில  முதல்வர்களின் மாநட்டுக் கூட்டத்தை கூட்டியுள்ளார். இதில் அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்பார்கள். தமிழக முதல்வருக்குப் பதிலாக நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்ம் பங்கேற்பார் எனத் தெரிகிறது. சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டம் மீண்டும் கூட்டப்படவுள்ளது. அந்த கூட்டத்தில் டாப் முதல்வரின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close