Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒலிம்பிக்கில் பதக்க வேட்டைக்காக காத்திருக்கும் தமிழர்கள்!

லிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக 100க்கும் மேற்பட்ட  இந்திய வீரர் வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். தமிழகத்தில் இருந்து 8 வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

தமிழகம் சார்பில் ரியோ ஒலிம்பிக்கில் 8 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
வேலூரை சேர்ந்த சதீஷ் சிவலிங்கம் மிகச் சிறந்த பளு தூக்கும் வீரர். கடந்த 2014 ம் ஆண்டு கிளாஸ்கோவில் நடந்த  காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றவர். அதனால் இந்த ஒலிம்பிக்கில் சதீஷ் மீதான நம்பிக்கை அதிகரித்திருக்கிறது.

அடுத்ததாக டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல் பதக்கம் வெல்ல வாய்ப்பிருக்கிறது.  சரத் கமல் 2006ம் ஆண்டு மெல்பர்ன் காமன்வெல்த் போட்டியில் டேபிள் டென்னிஸ் பிரிவில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றுள்ளார். 2010ம் ஆண்டு டெல்லி காமன்வெல்த் போட்டியில் இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்றுள்ளார். சரத் கமலுக்கு ரியோ ஒலிம்பிக் 4வது ஒலிம்பிக் போட்டி ஆகும்.

ஒலிம்பிக்கில் 20 கிலோ மீட்டர் அதி வேக நடைப்பந்தயத்தில் மெட்ராஸ்  ரெஜிமெண்டை சேர்ந்த கணபதி பங்கேற்கிறார். இந்திய ராணுவத்தில் ஹவில்தாராக பணி புரிந்து வரும் கணபதி,  கிருஷ்ணகிரி மாவட்டம் கவுண்டனூரைச்  சேர்ந்தவர்.

திருச்சியைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ், சென்னை வீரர் தருண் ஆகியோர் 400 மீட்டர் தொடர் ஓட்டத்திற்கான இந்திய குழுவில் இடம் பெற்றுள்ளனர்.  இதே தொடர் ஓட்டத்தில் மாற்று வீரராக பங்கேற்கவுள்ள மோகன் குமாரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்தான். ஒலிம்பிக்கில் தொடர் ஓட்டத்தில் பதக்கம் வெல்வது சவால்தான். இந்தியக் குழுவில் இடம் பெற்றிருப்பதே கெளரவமான  விஷயம் தான்.அந்த வகையில் இந்த மூவருமே பாராட்டுக்குரியவர்கள்.

ஹாக்கி வீரர் ருபீந்தர்பால் சிங் பஞ்சாப்பை சேர்ந்தவர் என்றாலும் சென்னையில்தான் வசித்து வருகிறார். தமிழகம் சர்பாகவே அவர் ஒலிம்பிக்கில்  பங்கேற்கிறார். இந்திய ஹாக்கி அணியின் கேப்டனும் கோல் கீப்பருமான ஸ்ரீஜேஷ் கேரளத்தில் பிறந்தாலும் தமிழக ஹாக்கி அணிக்காகத்தான் விளையாடி வருகிறார்.


 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ