Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

லண்டனில் கெளரவமிக்க விருதை வென்ற சென்னையின் 'வேதனை' புகைப்படம்!

து ஒரு வேதனை தரும் புகைப்படம் தான். ஆனால் அத்தனை தத்ரூபமாக எடுக்கப்பட்டிருந்தது. சென்னை மக்களுக்கு கடல் அரிப்பு ஒரு வேதனை தரும் விஷயம். தினம் தினம் கடலுக்குள் செல்லும் வீடுகள். ஒவ்வொரு முறையும் வீடுகளை இழக்கும் மீனவர்களின் வாழ்க்கை போராட்டத்தை அந்த புகைப்படம் அத்தனை அழகாக விளக்கியிருந்தது. சாந்குமார் என்ற பத்திரிகை புகைப்பட கலைஞர்தான் இந்த புகைப்படத்தை எடுத்தவர்.

தற்போது இந்த புகைப்படத்திற்கு லண்டனை சேர்ந்த  'அட்கீன்ஸ்' சுற்றுச்சூழல் விருதும் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு புகைப்பட கலைஞருக்கும் இந்த விருது ஒரு பெரும் கனவு. கிட்டத்தட்ட போட்டோகிராபியின் உச்சத்தைத் தொடுவது போன்ற உணர்வைத் தரும் விருது இது. சாந்குமார் விருதை வென்றதையடுத்து, இந்த ஆண்டுக்கான அட்கீன்ஸ் சுற்றுச்சூழலியல்  புகைப்பட  விருதை இந்திய புகைப்பட கலைஞர் எல். சாந்குமார் பெறுகிறார்  சென்னை நகரின் கடல் அரிப்பை  அற்புதமான முறையில் பதிவு செய்ததற்காக அவருக்கு இந்த விருது  வழங்கப்பட்டுள்ளது என 'தி கார்டியன்' செய்தி வெளியிட்டிருந்தது.

இதையடுத்து ஒரே நாளில் சாந்குமாரும் அவரது புகைப்படமும் பாப்புலராகி விட்டது. ஆஸ்கர் விருதை வென்ற லியார்னடோ டி காப்ரியோ கூட அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் ஷேர் செய்ய சாந்குமார் தன்னைத்தானே கிள்ளிப்பார்த்துக் கொண்டார்.  கெளரவமிக்க விருதை வென்ற சாந்த் குமார் கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர். சென்னை ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் நீண்ட காலம் பணியாற்றி வந்தவர் தற்போது மும்பையில் பணியாற்றி வருகிறார். 

இந்த விருது வென்றதையடுத்து  சாந்தகுமாருக்கு ஒரு ஆண்டு இங்கிலாந்தில் வசிக்க   குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.  ஒரு வருட காலம் இங்கிலாந்தில் தங்கியிருந்து அட்கீன்ஸ் சுற்றுச் சூழல் அமைப்பு சார்பாக நடத்தப்படும் அனைத்து நிகழ்வுகளையும் புகைப்படமாக பதிவு செய்து தரும் சிறப்பு பணியில் அவர் ஈடுபட வேண்டும். அனைத்து ஏற்பாடுகளையும் அந்த நிறுவனமே செய்து தரும்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ