Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நோயுற்ற தாய், கால் இழந்த தங்கை: தவித்த நபீஷாவுக்கு லாட்டரியில் ஒரு கோடி!

கேரளாவில் ரப்பர் தோட்டத் தொழிலாளியான ஏழை பெண் ஒருவருக்கு லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது.

திருவனந்தபுரம் மாவட்டம் கிளிமானுர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் நபீஷா . தந்தையை இழந்தவர் . இவரது தாயார் நோயால் அவதிப்பட்டு வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு  முன்னர்  நபீஷாவின் இளம் சகோதரி விபத்தில் சிக்கி ஒரு காலையும் இழந்தார். ரப்பர் அறுக்கும் தொழிலுக்கு சென்று நபீஷா குடும்பத்தை நடத்தி வந்தார். அன்றாட ஜீவனத்துக்கே கஷ்டமான நிலையில்,  கிடைக்கும் சொற்ப சம்பளத்தில் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. அந்த நபீஷா, இப்போது அளவில்லாத ஆனந்தத்தில் திளைக்கிறார்.

காரணம் கேரள அரசு நடத்தும் 'ஸ்திரி சக்தி ' என்ற  லாட்டரியில் அவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்திருக்கிறது. 'ஸ்திரி சக்தி ' என்பது பெண்களுக்கான லாட்டரி சீட்டு ஆகும். கேரளத்தில் பெண்களின் நிலையை உயர்த்துவதற்காக முன்பிருந்த உம்மன் சாண்டி அரசு, இந்த வகை  லாட்டரிச் சீட்டை அறிமுகப்படுத்தியிருந்தது. வாராந்திர லாட்டரியான இதன் விலை ரூ 50 ஆகும்.இந்த லாட்டரி விற்பனையில் கிடைக்கும் நிதியை பெண்கள் முன்னேற்றம், வளர்ச்சித் திட்டங்களுக்கே கேரள அரசு பயன்படுத்தி வந்தது.

நபீஷா, பல முறை இந்த லாட்டரிச் சீட்டை வாங்கியிருக்கிறார். இரு முறை 5 ஆயிரம் ரூபாய் அடித்துள்ளது. பலமுறை ஆயிரம் ரூபாயும் அடித்துள்ளது. இது குறித்து  நபீஷா கூறுகையில்,'' கொஞ்சம் நிலம் வாங்கி, அதில் ஒரு சிறிய வீடு கட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் எனது தங்கைக்கு ஒரு ஸ்டேஷனரி கடை வைத்துக் கொடுக்க வேண்டும். இதுதான் எனது கனவு. '' என்கிறார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ