Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஷீரடி விமான நிலையம் அக்டோபரில் திறப்பு...


ஷீரடியில் கட்டப்பட்டு வரும் புதிய விமான நிலையம், வருகிற அக்டோபர் மாதம் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில், சர்வதேச அளவில் புகழ் பெற்ற ஆன்மிகத் தலமாக திகழ்கிறது, ஷீரடி சாய்பாபா கோயில். இக்கோயிலுக்கு இந்தியா மட்டுமின்றி, பல வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் ஷீரடியில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கை இருந்து வந்தது. இந்நிலையில், ஷீரடியில் 900 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 2 ஆயிரத்து 500 மீட்டர் பரப்பளவுக்கு விமான ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆயிரம் மீட்டருக்கு அதை விரிவாக்கம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளன.

விமான நிலையத்துக்கான இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 225 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர விமான நிலைய வளர்ச்சி ஆணையம் தெரிவித்துள்ளது. அத்துடன் விமான நிலைய திறப்பு விழாவுக்கு,  பிரதமர் நரேந்திர மோடியை அழைக்க மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close