Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு... நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது!

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன. இந்த விலைக் குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒரு முறை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி கடந்த 1–ம் தேதி, பெட்ரோல் விலையை லிட்டருக்கு 89 காசுகளும், டீசல் விலையை லிட்டருக்கு 49 காசுகளும் எண்ணெய் நிறுவனங்கள் குறைத்து அறிவித்தன.

இந்நிலையில், இம்மாதத்தில் இரண்டாவது முறையாக நேற்று பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன. அதன்படி, பெட்ரோல் விலை ரூ.2.25 காசுகள் குறைக்கப்பட்டு உள்ளது. இதனால், டெல்லியில் ரூ.64.76 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, ரூ.62.51 ஆக குறைந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 6‌2 ‌ரூ‌பாயாக குறைக்கப்பட்டு உள்ளது.

அதுபோல், டீசல் விலையை 42 காசுகள் குறைக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.54.70 காசுகளில் இருந்து ரூ.54.28 ஆக குறைந்து உள்ளது. சென்னையில் டீசல் விலை 5‌5 ரூபாய் 82 காசாக குறைக்கப்பட்டு உள்ளது. இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்ததாலும் இந்த விலை குறைப்பு அமல்படுத்தப்படுவதாக இந்திய எண்ணெய் கழகம் தெரிவித்து உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close