Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருமணத்தின் போதே வளர்ப்பு தந்தையான மணமகன்!

த்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் ஆதித்யா திவாரி. சாஃப்ட்வேர் என்ஜினியரான ஆதித்யாவுக்கு, 'திருமணத்திற்கு முன்னரே  டவுண் சின்ட்ரோம்  பாதித்த ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க வேண்டும். அதன் மூலம் அந்த நோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்' என்ற ஆசை இருந்தது.

ஆனால் மத்தியபிரதேசத்தில், 30 வயது இருந்தால்தான் குழந்தையை தத்தெடுக்க முடியும். திவாரிக்கோ வயது 28 தான் ஆகியிருந்தது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதத்தில், 25  வயது பூர்த்தி யடைந்திருந்தாலே, குழந்தையை தத்தெடுக்கலாம்  என சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து  பின்னி என்ற ஒன்றரை வயது  டவுன் சின்ட்ரோம் பாதித்த குழந்தையை  ஆதித்யா திவாரி தத்து எடுத்துள்ளார். தற்போதுதான் அதற்கான சட்டப்பூர்வ நடைமுறைகள் முடிவடைந்தன.  பின்னியின் பெயரை அவினேஷ் என மாற்றினார் திவாரி. தற்போது இவர்தான் நாட்டிலேயே இளவயது பேச்சிலர் தந்தை.

முதலில் ஆதித்ய திவாரியின் முன்மாதிரியான முயற்சிக்கு, குடும்பத்தில் அனைவருமே முட்டுக்கட்டையாக இருந்துள்ளனர். 'உனக்கு யார் பொண்ணு தருவா... எந்த பெண் உன்னை கட்டிக் கொள்ள முன்வருவாள்' என்பது  போன்ற கேள்விகளை  திவாரி எதிர்கொள்ள வேண்டி இருந்தது. ஆனால் ஆதித்ய திவாரி முடிவில் உறுதியாக இருக்க, அவரது பெற்றோரும் மனம் மாறி விட்டனர். தன்னைத் திருமணம் செய்து கொள்பவர்  தன்னைப் போலவே அவினேஷ் மீது நேசம் காட்டுவாரா என்ற கவலை மட்டுமே அவருக்கு  இருந்தது. அவரது விருப்பத்தையும் மனதையும் புரிந்து கொண்ட பெண் ஒருவர், இப்போது  திவாரியை திருமணம் செய்து கொள்ள சம்மதித்துள்ளார். இவர்களது திருமணம் இன்று இந்தூரில் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவற்றோர், ஆதரவற்ற குழந்தைகள் பங்கேற்றனர். ஆயிரத்துக்கு மேற்பட்ட தெருநாய்களும், சில விலங்குகளும்  கூட பங்கேற்றன. அனைவருக்கும் திருமண விருந்து வழங்கப்பட்டது.  திருமணத்தை முன்னிட்டு 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. திருமணத்துக்கு வந்த உறவினர்களிடம் இருந்து புத்தகங்களும் மருந்துகளும் மட்டுமே  பரிசாக பெறப்பட்டன.

திருமணம் குறித்து ஆதித்யா திவாரி,'' திருமணம் என்ற பெயரில் ஆடம்பரமாக செயல்பட்டு பணத்தை வீணடிக்கின்றனர்.  உணவுகளுக்கு ஆடம்பரமாக செலவழிக்கின்றனர். எல்லோரையும் போல நான் இருக்க விரும்பவில்லை. எனது திருமணத்தின் அடையாளம்தான் இந்த பின்னி. டவுன் சின்ட்ரோம் என்ற பிறவி குறைபாடு கொண்டவன். எனது விருப்பத்தை என்னவளிடம் தெரிவித்த போது அவர் மகிழ்ச்சியோடு சம்மதித்தார். அதற்கு மேல் வேறு என்ன வேண்டும். இப்போது எங்களுக்கு பின்னிதான் முதல் மகன். எனது மனைவி என்னை விட அதிகமாக பின்னியை கேர் எடுத்துக் கொள்கிறார். ஒரு தந்தையாக எனக்கு வேறு என்ன வேண்டும்'' என மகிழ்ச்சியுடன் கூறினார்.

திருமணத்தன்று விவசாயிகளுக்கு தலா 20 ஆயிரம் நிதி  வழங்கிய தம்பதி

ஆந்திர மாநிலம் அமராவதியை சேர்ந்த  அபே  தீவாருக்கும் பிரீத்தி என்பவருக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது. வழக்கமாக திருமணத்தன்று மணமக்களுக்கு உறவினர்கள், நண்பர்கள்  பரிசு வழங்குவார்கள். ஆனால் அபே பிரீத்தி திருமணம் சற்று வித்தியாசமானது. தெலுங்கானாவில் வறட்சியால் ஏரானமான விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தங்கள்  திருமணத்தை அர்த்தமுள்ளதாக மாற்றிக் காட்ட அபேவும் பிரீத்தியும் முடிவு செய்திருந்தனர்.

அதன்படி திருமணத்தன்று  10 விவசாயிகளுக்கு தலா 20 ஆயிரம் ரூபாயை தம்பதிகள் வழங்கினர். அடுத்து அமரவாதி பகுதியில் உள்ள 5 லைப்ரேரிகளுக்கு ரூ. 52 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கப்பட்டன.  எளிமையான உணவு வகைகள் திருமண விருந்தில் இடம் பெற்றிருந்தன. கடன் வாங்கி ஆடம்பரமாக திருமணம் செய்ய வேண்டாமென்றும் எளிமையான திருமணமே நல்லது என்பதை அறிவுறுத்தும் வகையில் சிறப்பு பேச்சாளர்கள் திருமணத்தில் கலந்து கொண்டு பேசினர்.


 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close