Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உ.பி.யில் விஷச்சாராயத்துக்கு 17 பேர் பரிதாப பலி! -பலர் மருத்துவமனைகளில் அனுமதி

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், விஷச்சாராயம் குடித்தவர்களில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ அருகே உள்ள எட்டா மாவட்டத்துக்குட்பட்ட அலிகஞ்ச் பகுதியில் அதிகபோதைக்காக விஷத்தன்மை கொண்ட சில பொருட்களை கலந்து தயாரித்து விற்கப்பட்ட சாராயத்தை, மல்லிகாபாத், உனானோ கிராமங்களைச் சேர்ந்தவர்கள் நேற்று மாலை வாங்கி குடித்துள்ளனர்.

விஷச்சாராயம் குடித்த 14 பேர் நேற்று பரிதாபமாக உயிரிழக்க, 100க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் உடனடியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 6 பேர் கண் பார்வை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. இந்த கோர சம்பவம் தொடர்பான தகவல் அறிந்ததும், பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், விஷச்சாராயம் குடித்து 17 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, மல்லிகாபாத் ஆய்வாளர், மதுவிலக்குப் பிரிவு போலீசார் உள்பட 8 பேரை சஸ்பென்ட் செய்து அரசு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ