Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரயில் பாதையில் உயிரோடு விளையாடும் சிறுவர்கள்! - பதற வைக்கும் வீடியோ

காசியாபாத்: ரயில் பாதையில் உயிரோடு விளையாடும் சிறுவர்களின், பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி ஒன்று தற்போது வெளிவந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இளம் கன்று பயமறியாது என்பார்கள். அதை உணர்த்தும் விதமாக, உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஒரு ஆற்றுப்பாலத்தில் அதிவேகமாக ரயில் வந்து கொண்டிருந்த போது, தண்டவாளத்தில் சிறுவர்கள் சிலர் வரிசையாக அணி வகுத்து நிற்கிறார்கள்.

அப்போது, ரயில் மிகமிக அருகில் வரும் வரை காத்திருக்கும் அந்த சிறுவர்கள், ரயில் அவர்களுக்கு சில அடி தொலைவில் வந்ததும் ஒவ்வொருவராக மின்னல் வேகத்தில் ஆற்றுக்குள் பாய்ந்து நீந்தி செல்கிறார்கள்.

பார்ப்போரைப் பதற வைக்கும் இந்த சம்பவத்தின் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

எடிட்டர் சாய்ஸ்