Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒன்றரை லட்சத்துக்காக 'தங்க சட்டை' மனிதர் உயிர் பறிப்பு!

புனேவில் தங்க சட்டை மனிதர் தத்தாத்ரேபுஜேவை அவரது நண்பர்களே கொலை செய்திருப்பது தற்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஒன்றரை லட்சம் பணத்துக்காக அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம், புனே மாவட்டம், பிம்ப்ரி அருகேப சின்ஸ்வாத் நகரை சேர்ந்தவர்  தத்தாத்ரே புஜே. நிதி நிறுவன அதிபரான புஜே, கடந்த 2012 ஆம் ஆண்டு ரூ.1.27 கோடி மதிப்பில் 3.5 கிலோ எடையுள்ள தங்கச் சட்டையை அணிந்து வலம் வந்தார். இதன் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார் புஜே.

கடந்த  வியாழக்கிழமை இரவு பிம்பிரியில் ஒரு பிறந்த நாள் நிகழ்ச்சியின்போது அவர் தனது மகன் சுபமுடன் கலந்து கொண்டார். அப்போது சீட்டு பண விவகாரத்தில் அடித்து கொலை செய்யப்பட்டார். சுபம் அளித்த புகாரின் பேரில், அவரது உறவினர் உள்பட 5 பேர் கைது செய்யப்ட்டிருந்தனர். மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், இந்த கொலையில் முக்கிய குற்றவாளியான அதுல் மோகிதே என்பவர் புஜோவின் மகன் சுபத்திடம் பிறந்த நாள் பார்ட்டிக்கு தந்தையை அழைத்து வருமாறு கூறியுள்ளார். வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் தந்தையும், மகனும் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர்.

அப்போது அதுல் 10 பொட்டலம் பிரியாணியும் 2 சிகரெட் பாக்கெட்டுகளையும் வாங்கி வருமாறு சுபத்திடம் கூறி அனுப்பியுள்ளார். சுபம் தனது நண்பருடன் இதையெல்லாம் வாங்கிவிட்டு திரும்பும்போது, அங்கிருந்த அனைவரும் சேர்ந்து புஜேவைத் தர்க்கிக் கொண்டு இருந்துள்ளனர்.

சுபத் உடனடியாக அதனைத்தடுக்க முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் புஜே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close