Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பொற்கோயிலில் பாத்திரம் கழுவியது இதற்காகத்தான்! - அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம்

புதுடெல்லி: பொற்கோயிலில் பாத்திரங்கள் கழுவியது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறும்போது, 'எங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிந்தோ, தெரியாமலோ நாங்கள் செய்த தவறுக்கு பரிகாரமாக நான் இங்கு வந்து இந்தச் சேவையில் ஈடுபட்டேன்' என்று கூறி உள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஆம் ஆத்மி கட்சி அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் ஆம் ஆத்மி இளைஞர் பிரிவு கொள்கை அறிக்கை வெளியிடப்பட்டது. அந்தப் புத்தகத்தில் இடம்பெற்ற பொற்கோயிலின் படம் அருகே, ஆம் ஆத்மி கட்சியின் சின்னமான துடைப்பமும் சேர்த்து அச்சடிக்கப்பட்டு இருந்தது.

இது சீக்கியர்கள் மத்தியில் அதிருப்தியைக் கிளப்ப, அது சர்ச்சையாக வெடித்தது. அதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்தது. எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ஒருவர் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை சீக்கியர்களின் புனித நூலுடன் ஒப்பிட்டார். இதனால் மேலும் கனன்று எழுந்தது வெறுப்பு. இதனால்  சீக்கியர்களின் கோபம் தேர்தலில் வெளிப்படலாம் என்ற அச்சம் ஆம் ஆத்மி கட்சிக்கு ஏற்பட்டது.

இந்நிலையில் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், அமிர்தசரஸ் பொற்கோயிலுக்கு வந்து வழிபட்டதுடன், அங்குள்ள சமுதாய சமையலறைக்குச் சென்று அங்கிருந்த பாத்திரங்களைக் கழுவி சுத்தம் செய்தார். சுமார் 45 நிமிடங்கள் பாத்திரங்களைக் கழுவி பரிகார பணிவிடை புரிந்தார் கெஜ்ரிவால்.

இது குறித்து கெஜ்ரிவால் கூறும்போது, ''எங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிந்தோ, தெரியாமலோ நாங்கள் செய்த தவறுக்கு பரிகாரமாக நான் இங்கு வந்து இந்தச் சேவையில் ஈடுபட்டேன். இங்கு, பாடப்பட்ட சபாத் கீர்த்தனை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. தற்போது எனது மனம் மிகுந்த அமைதி அடைந்துள்ளது" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close