Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'துணிவிருந்தால் வளர்ச்சித் திட்டங்களைத் தடுத்துப் பாருங்கள்!'- மோடிக்கு கெஜ்ரிவால் சவால்

புதுடெல்லி: 'டெல்லியின் வளர்ச்சித் திட்டங்களை முடிந்தால் தடுத்துப் பாருங்கள், ஆத்மி அரசின் சீர்திருத்தக் கொள்கைகளைத் துணிவிருந்தால் நிறுத்திப் பாருங்கள்' என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் கெஜ்ரிவால் சவால் விடுத்துள்ளார்.

டெல்லியில் விகாஸ்புரி - மீராபாக் இடையே புதிதாகக் கட்டப்பட்ட மேம்பாலத்தை நேற்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், ''சி.பி.ஐ., அமலாக்கத் துறை என அனைத்து விசாரணை அமைப்புகளையும் எங்களுக்கு எதிராக மத்திய அரசு தூண்டி விட்டுள்ளது. ஆனால், ஆம் ஆத்மிக்கு எதிராக ஓர் ஊழல் குற்றச்சாட்டைக் கூட அவர்களால் ஆதாரங்களுடன் வெளிப்படுத்த இயலாது.

என் மீதும் ரூ.15 கோடி ஊழல் குற்றச்சாட்டை பா.ஜ.க.வினர் முன் வைத்தனர். ஆனால், அதை அவர்களால் நிரூபிக்க முடியவில்லை. டெல்லி அரசுக்கு எதிராக காழ்ப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை பிரதமர் மோடி நிறுத்திக்கொள்ளவேண்டும். தொடர்ந்தால், டெல்லி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட நிலைமைதான் பஞ்சாப், கோவா, குஜராத்திலும் ஏற்படும்.

பிரதமர் மோடியிடம் சவால்விட்டுக் கூறுகிறேன், டெல்லியின் வளர்ச்சித் திட்டங்களை முடிந்தால் தடுத்துப் பாருங்கள், ஆம் ஆத்மி அரசின் சீர்திருத்தக் கொள்கைகளை துணிவிருந்தால் நிறுத்திப் பாருங்கள். இது பாண்டவர்களுக்கும், கெளரவர்களுக்கும் இடையே நடக்கும் தர்ம யுத்தம்" என்றார் ஆவேசமாக.

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ