Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மான்வேட்டையாடிய வழக்கு: நடிகர் சல்மான்கான் விடுதலை!

ராஜஸ்தான்: மான் வேட்டையாடிய வழக்கில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் விடுதலை செய்யப்பட்டார்.

கடந்த 1998 ம் ஆண்டு,  ராஜஸ்தான் மாநிலத்திற்கு  படப்பிடிப்புக்குச்  சென்றபோது, சல்மான்கான் மான் வேட்டையாடியதில் 3 அரியவகை மான்கள் கொல்லப்பட்டன. அது தொடர்பான  வழக்கில் வனவிலங்கு வேட்டையாடுதல் தடை சட்டத்தின் கீழ் அவருக்கு கீழ் நீதிமன்றம் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது.

தீர்ப்பை எதிர்த்து அவர் அப்பீல் செய்ததையடுத்து சல்மான்கானுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் அவர் வெளிநாடு செல்லவும் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. பின்னர் நீதிமன்றத்தில் மனு செய்து விதிவிலக்கு பெற்றார் சல்மான்கான்.

இந்த வழக்கின் மேல்முறையீடு ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கீழ்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்துசெய்து இன்று உத்தரவு பிறப்பித்தது ராஜஸ்தான் உயர்நீதிமன்றம். 


 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ