Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாயாவதியை தரக்குறைவாக விமர்சித்த வழக்கு:தயாசங்கருக்கு பிடிவாரண்டு!

லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை அவதூறாகப் பேசிய வழக்கில், உத்தர பிரதேச மாநில பா.ஜ.க. முன்னாள் துணைத் தலைவர் தயாசங்கர் சிங்குக்கு ஜாமீனில் வெளிவர ,முடியாத பிடியாணையை பிறப்பித்து லக்னோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநில பா.ஜ.க. துணைத் தலைவராக இருந்தவர் தயாசங்கர் சிங். இவர், கடந்த வாரம் 'மாவ்' என்ற இடத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும்போது, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தேர்தலில் போட்டியிட சீட் அளிக்கும் முறையை விமர்சித்து அவதூறாகப் பேசி இருந்தார்.

இது பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தயாசங்கருக்கு எதிராக, பகுஜன் சமாஜ் தேசிய செயலாளர் மேவலால் கவுதம், ஹஸ்ரத்கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் தயாசங்கர் மீது அங்கு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது தயாசங்கர் தலைமறைவாக உள்ளார். மேலும், பா.ஜ.க. மேலிடம், தயாசங்கர் மீது நடவடிகை எடுத்து அவரை கட்சியை விட்டு நீக்கியது.

இந்நிலையில் போலீசாரின் கோரிக்கையை ஏற்று, லக்னோவில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம், தயாசங்கருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணையை நேற்று வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக லக்னோ காவல்துறை கண்காணிப்பாளர் மஞ்சில் சைனி செய்தியாளர்களிடம் கூறும்போது, ''மாநில காவல்துறை மாவ், பாலிலா, கோரக்பூர், மற்றும் லக்னோ ஆகிய இடங்களில் சோதனை நடத்தியது. ஆனாலும் தயாசங்கர் கிடைக்கவில்லை. அநேகமாக அவர் டெல்லியில் மறைந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அத்துடன், அவர் ஏதேனும் ஒரு நீதிமன்றத்தில் சரணடையக்கூடும் என்றும் நாங்கள் சந்தேகிக்கிறோம். ஆனாலும், தயாசங்கரை விரைவில் கைது செய்ய, காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது" என்று தெரிவித்து உள்ளார்.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close