Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீதா அம்பானிக்கு விஐபி பாதுகாப்பு!

ம்பானி குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு சில வருடங்களுக்கு முன்பு மத்திய அரசு "Z" தர பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது. அதற்கான செலவிற்காக மாதம் 15 லட்சம் ரூபாய் வரை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கூறினாலும், ஒரு தனிநபருக்கு எப்படி மத்திய பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு வழங்கலாம் என்ற கேள்வி எழுந்தது.

தற்பொழுது முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானிக்கு "Y" அந்தஸ்து பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான செலவினை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த "Y" அந்தஸ்து பாதுகாப்பு, இந்திய பிரதமர்களுக்கு வழங்கப்படும் “SPG" பாதுகாப்புக்கு அடுத்து வரும் மிகப் பெரிய பாதுகாப்பான "Z+" தர அந்தஸ்திற்கு இணையானதாகும். ஏற்கனவே வழங்கப்பட்ட  "Z" தர மத்திய பாதுகாப்பு படையின் (CRPF) 28 கமாண்டோக்கள் முகேஷ் அம்பானிக்கும், அவர் குடும்பத்தாருக்கும் இந்தியாவில் எங்கு சென்றாலும் பாதுகாப்பு வழங்கி வந்தனர். இதில் நீதா அம்பானிக்கான பாதுகாப்பும் அடங்கும். ஆனால் தற்பொழுது மத்திய உள்துறை அமைச்சகமும், மத்திய உளவுத்துறையும் இவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கருத்து கூறியதால், மத்திய அரசு இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. நீதா  தனியாக பயணம் செய்யும்போது அவருக்கு தனியாக பாதுகாப்பு  வழங்க, இப்போது 10 சிஆர்பிஎப் கமாண்டோக்கள் இருப்பார்கள்.

இது ஒருபுறம் இருக்க, தினந்தோறும் பணியிடங்களுக்கும், கல்லூரிகளுக்கும் சென்று வரும் பெண்களுக்கு இன்னும் போதிய பாதுகாப்பு இல்லை என்பது வருத்தத்திற்குரிய உண்மை. அம்பானிகளுக்கு மட்டுமல்ல ‘சுவாதிகளுக்கும்’ போதிய பாதுகாப்பு வழங்குவதும் அரசின் கடமையே.

- க.ராஜவேலு
(மாணவப்பத்திரிகையாளர்)

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close