Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக காங்கிரஸ் திடீர் ஆர்ப்பாட்டம்!

நாகர்கோவில்: 2010 ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்த போது ஏழை, இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க கோரி, பொன்.ராதாகிருஷ்ணன் மாணவர்களை திரட்டி, 'ஜூலைப் போராட்டம்' என்கிற பெயரில் பெரிய அளவில் போராட்டங்களை, நடத்தி வந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, 'ஏழை, இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை  பெற்று தருவேன்', என பிரசாரத்தில் வாக்குறுதி அளித்தார்.

இந்நிலையில், மத்தியில் பாஜக ஆட்சி அமைத்து  இரண்டு வருடங்களாகியும் ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க முயற்சிக்காமல், பொய்யான வாக்குறுதி கொடுத்து, மக்களை ஏமாற்றிய பொன்.ராதாகிருஷ்ணன், பொது மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், இனிமேல் பொய்யான வாக்குறுதிகளை கொடுக்க கூடாது என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சி சார்பில், நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு, இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் பேசும் போது, "தனது அரசியல் லாபத்திற்காக மாணவர்களை கடும் வெயிலில் நிற்க வைத்து ஜூலைப் போராட்டம் நடத்திய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஏழை, இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்கா விட்டால் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக, கல்வி உதவித்தொகை கிடைக்கும் வரை காங்கிரஸ் கட்சி தொடந்து போராட்டங்களில் ஈடுபடும். அதற்கு, அடுத்து பொன்னாரின் வீட்டை முற்றுகையிடுவோம். கல்வி உதவித்தொகை பெற்றுத் தராவிட்டால், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பதவி விலக வேண்டும்'' என்றார்.

இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை கேட்டு, இந்து மக்கள் கட்சி ஜூலைப் போராட்டத்தை கையில் எடுத்து உள்ளது.

- த.ராம்
படங்கள்: ரா.ராம்குமார்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ