Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'இந்தியாவுக்கு வந்துட்டேன்னு சொல்லு...!'- போக்கிமான் முதல் விபத்து

து நடக்கக் கூடாதோ, அது நடந்தே விட்டது. போக்கிமான் கோ செல்போன் கேம் மூலம், இந்தியாவில் முதல் விபத்து பதிவாகி விட்டது.

ஆக்மென்டட் ரியாலிட்டி டெக்னாலஜியில், பட்டையைக் கிளப்பும் போக்கிமான் கோ, செல்போன் உலகில் இப்போதைய நம்பர் ஒன் கேம். நிஜ உலகின் விர்ச்சுவல் சீன்களை மிக்ஸ் பண்ணி, செல்போன் கேம் உலகில் புது யுக்தியைக் கையாண்டு, கேம் பிரியர்களை அடிக்ட் ஆக்கிவிட்டது, போக்கிமான் கோ. இந்த கேமில் வரும் பூச்சிகளைப் பிடிக்கிறேன் பேர்வழி என்று, மாடியில் இருந்து தவறி விழுந்தவர்கள், நேருக்கு நேராக காரில் மோதியவர்கள் என்று இப்போது அமெரிக்காவில் ஜாலி பாதி; பீதி மீதி என்கிற ரீதியில் உலா வருகிறது போக்கிமான். இந்தியாவுக்கு இன்னும் வராமல் இருந்த போக்கிமான் கோ கேமை, ஆங்காங்கே ‘கபாலி’ திருட்டு விசிடி மாதிரி பைரேட்டட் வெர்ஷனாக மொபைலில் இன்ஸ்டால் செய்தும் விளையாட ஆரம்பித்து விட்டார்கள், இந்தியர்கள்.

மும்பையில் உள்ள கார் டீலர் ஜாபீர் அலி, வேலையை முடித்துவிட்டு,  தனது பென்ஸ் E க்ளாஸ் காரில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். கோ-டிரைவர் சீட்டில் அமர்ந்து, ‘ரொம்ப நேரமா செல்போனை மூஞ்சிக்கு நேரா வெச்சி ஏதோ பண்ணிக்கிட்டிருக்கானே’ என்று கேம் விளையாடிக் கொண்டிருந்த தனது தம்பியை முதலில் கடிந்து கொண்டவர், கேமின் விதிமுறைகளைத் தெரிந்து கொண்டு ஆர்வமாகி விட்டார். ‘எங்க குடு பார்ப்போம்...’ என்று தம்பியிடமிருந்து செல்போனைப் பறித்து, காரை ஓட்டிக்கொண்டே கேமில் மும்முரமாகிவிட்டார் ஜாபீர் அலி. ‘ஆகே பக்கடோ பக்கடோ’ என்று பூச்சிகளைப் பிடிப்பதில் ஆர்வமாய் இருந்தவர், தடாலென ஒரு ஆட்டோ மீது தனது பென்ஸை நேருக்கு நேர் மோத, நல்லவேளையாக யாருக்கும் எந்தச் சேதாரமும் இல்லை. உடைந்து போன ஆட்டோவுக்கும், நசுங்கிப் போன பம்ப்பருக்கும் சேர்த்து, ஜாபீலர் அலிக்கு, சில ஆயிரங்களில் செலவு வைத்திருக்கிறான் போக்கிமான்.

‘‘போக்கிமான் கோ, எங்களுக்கு மிகப் பெரிய தலைவலியாக மாறிவிட்டது. மும்பையில் நிறைய பேர் சாலைகளில் போக்கிமான் விளையாட ஆரம்பித்து விட்டார்கள். நடந்து கொண்டே விளையாடுவதுகூடப் பரவாயில்லை; காரில், பைக்கில் பறந்து கொண்டே விளையாடுவது கடுமையான ஆபத்துக்களை விளைவிக்கும். உங்கள் பாதுகாப்பு எங்கள் சேவை!’’ என்று பிரசாரம் செய்ய ஆரம்பித்து விட்டது மும்பை காவல்துறை.

மும்பையைத் தொடர்ந்து, ‘தமிழ்நாட்டுக்கு வரமாட்டேன்னு சொல்லு’ என்பதுதான் தமிழக காவல்துறையின் இப்போதைய எண்ணமாக இருக்குமோ?

- தமிழ்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.

MUST READ