Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குஜராத் முதல்வர் பதவியில் இருந்து ஆனந்தி பென் விலகல்!- முகநுால் மூலம் தகவல்!

குஜராத் முதல்வர் பதவியில் இருந்து ஆனந்தி பென் பட்டேல் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

''இது தொடர்பாக 2 மாதத்திற்கு முன், பாரதிய ஜனதா கட்சித் தலைமைக்கு முதல்வர் பதவியில் இருந்து விலக அனுமதிக் கோரி கடிதம் எழுதினேன். 2 மாத காலம் பொறுத்துக் கொள்ளும்படி  தலைமை கேட்டுக் கொண்டது. இதையடுத்து, பதவியில் தொடர்ந்தேன். இந்த நிலையில் இன்று மீண்டும் பதவி விலகக் கோரி அனுமதி கேட்டேன். இப்போது கட்சித் தலைமை அனுமதித்துள்ளது. அதனால் எனது ராஜினாமாவை கட்சித் தலைமைக்கு அனுப்பியுள்ளேன்'' என ஆனந்தி பென் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆனந்தி பென் பட்டேல், குஜராத்தின் முதல் பெண் முதல் அமைச்சர். பிரதமர் மோடி பிரதமரானதையடுத்து,  குஜராத்தின் முதல்வர் ஆனார். நவம்பர் 21ம் தேதியுடன் ஆனந்தி பென்னுக்கு 75 வது வயது பிறக்கிறது. வயது முதிர்வு காரணமாக அவர் ராஜினாமா முடிவுக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close