Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிவிட்டு, விவசாயி மகன் தற்கொலை: தொடரும் சோகம்...

த்திய அரசும் விவசாயிகளுக்கு பல திட்டங்களை அறிவித்துக் கொண்டே தான் இருக்கிறது. ஆனால்,  விவசாயிகளுக்கு நல்ல திட்டங்கள் சென்று சேர்கிறதா? என்றால், கேள்விக்குறி தான். இவ்வளவு திட்டங்கள் அறிவித்தும் ஏன்  விவசாயிகளின் தற்கொலையும் நடக்கிறது. அது சரி, தலைநகர் டெல்லியில் நடந்த போராட்டத்தில் மரத்தில் தூக்கில் தொங்கிய விவசாயி பற்றியே அரசுக்குக் கவலையில்லை. மற்ற இடங்களில் நடைபெறும் தற்கொலைகளை மத்திய அரசு கண்டுகொள்ளவா போகிறது. நாளுக்கு நாள் இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை அதிகமாகிக் கொண்டே வருகிறது. இதற்கு காரணம் கடன் வாங்கிய வங்கிகளால் ஏற்படும் தொல்லைகள், ஜப்தி நடவடிக்கைகள், சரியான மழையின்மை என பல உண்டு. இதனைத் தொடர்ந்து நேற்று வங்கிக் கடன் தொல்லை தாங்காமல், பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதிவிட்டு, விவசாயி மகன் ஒருவர் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

மராட்டிய மாநிலம், யவத்மால் மாவட்டம், மார்வாடி கிராமத்தில் வசித்து வந்தவர், கோபால் ரத்தோடு. இவரது தந்தை ஒரு விவசாயி. இவருக்கு சொந்தமாக 3 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. இந்த நிலையில், விவசாயத்தை நம்பி வங்கியில் வாங்கிய கடனை இவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. வங்கி அதிகாரிகள் அடிக்கடி கோபால் ரத்தோடையும், அவரது தந்தையையும் துன்புறுத்தினர். இதனால், விரக்தி அடைந்த கோபால் ரத்தோடு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்னர் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகளை சுட்டிக்காட்டி பிரதமர் மோடிக்கு அவர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், கோபால் ரத்தோடு, 'அடமானமாக சொத்துக்களை தர தயாராக இருக்கும், தொழில் அதிபர்களுக்கு வங்கிகள் கடன் வழங்க தயாராக இருக்கின்றன. ஆனால், சொத்து இல்லாத ஒருவர், வங்கி கடன் தேவைப்பட்டால் என்ன செய்வது... ஒரு கல்லூரி பேராசிரியரால் கூட தன்னுடைய மகனின் என்ஜினீயரிங் கல்லூரி கட்டணத்தை செலுத்த முடியவில்லை. இப்படி இருக்கும்போது, விவசாயி மகனின் நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். விவசாயிகளுக்கு மானியங்கள் கூட குறைவான சதவீதமே வழங்கப்படுகிறது. எந்தவித விசாரணையும் இன்றி, விவசாயிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்கின்றனர்' என்று எழுதியிருக்கிறார்.

- துரை.நாகராஜன்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.

MUST READ