Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இனி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம்!

புதுடெல்லி: குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் புதிய சட்ட மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

நாட்டில் நடக்கும் சாலை விபத்துக்களை குறைக்கவும், சாலை பாதுகாப்பை அதிகரிக்கும் வகையிலும் மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. குடிபோதையில் வாகனம் ஓட்டுவோர் மீது கடும் நடவடிக்கை, சாலை விதிகளை மீறுவோர் மீதான தண்டனை மற்றும் அபராதம் அதிகரிப்பு, சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதற்கு தடை உள்ளிட்ட பல்வேறு திருத்தங்கள் மோட்டார் வாகன சட்டத்தில் கொண்டுவரப்பட்டன.

இதில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம், வேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை அபராதம், லைசன்ஸ் இல்லாமல் ஓட்டினால் 2 ஆயிரம் அபராதம், ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 2 ஆயிரம் அபாரதம் மற்றும் வாகன ஓட்டுநர் உரிமம் ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கடுமையான சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

மேலும், இந்த சட்ட திருத்தத்தில் வாகன விபத்திற்கான இழப்பீடு தொகை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. அதேபோல், வாகன விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ.10 லட்சம் வரை இழப்பீடு தொகை உள்ளிட்ட பல்வேறு சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்து உள்ளது. இந்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

சிவாஜி குறித்து எம்.ஜி.ஆரின் சிலாகிப்பு! #HBDSivaji #NadigarThilagam
placeholder

ல பெண்களைக் கெடுத்துப் பொய் சொல்லும் பாத்திரம் அது. ஆனால், ஒவ்வொரு கட்டத்திலும் மக்களைத் தன்பால் இழுக்கு மளவுக்கு, ‘ஆங்கிலப் பாணி’ என்று உயர்த்திச் சொல்லப்படும் தகுதியோடு நடித்துப் புகழ்பெற்றார். இன்று, வேறு கோணங்களில் நின்று பார்ப்பவர்கள் சிலர், “ஆங்கிலப் படங்களைப் பார்த்து, அந்தப் பாத்திரங்களைப் போலவே, அந்தப் பாணியிலேயே நடிக்கிறார்’ என்று கூறுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் (‘திரும்பிப் பார்’ படமெடுத்த காலத்தில்) சிவாஜி அவர்கள் அதிக ஆங்கிலப் படங்களை எப்படிப் பார்த்திருக்க முடியும்? இப்போது ஆங்கிலப் படங்களில் நடிக்கும் நடிகர்கள் அப்போது எங்கே இருந்தார்கள்? இப்போது வருகிற படங்களைப் போல் அப்போது வருவதுண்டா? ஏற்று நடிக்கும் பாத்திரங்களுக்கு அவர் அற்புதமான மெருகேற்றி ஒப்புயர்வற்று நடிக்கும் போது, அந்த நடிப்புக்குப் பிறப்பிடமான பயிற்சியையும், தேர்ச்சியையுமல்லவா நாம் போற்ற வேண்டும்.

உங்க ஏரியா எப்படி இருக்கு? உள்ளாட்சி சர்வே முடிவுகள்..!

MUST READ