Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெல்லி மாநிலத்தின் நிர்வாக தலைவர் ஆளுநர்தான்! - உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: டெல்லி மாநிலத்தில், நிர்வாக தலைவராக ஆளுநரே செயல்பட முடியும் என்று உயர் நீதிமன்றம்  அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன்மூலம், ஆளுநருக்கே அதிக அதிகாரம் உள்ளது என்பது தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிப் பொறுப்பு ஏற்றது முதல் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள், மோதல்கள் அதிகரிக்கத் தொடங்கின. இதை தொடர்ந்து, அதிகாரிகள் இடமாற்றம், அதிகாரப் பகிர்வில் யாருக்கு அதிகாரம் உள்ளது என்பன தொடர்பாக டெல்லி அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்து உள்ளது.

அந்த தீர்ப்பில், டெல்லி மாநிலத்தில் நிர்வாக தலைவராக ஆளுநரே செயல்பட முடியும். டெல்லி மாநில அமைச்சரவையின் முடிவு, துணைநிலை ஆளுநரை கட்டுப்படுத்தாது. மேலும், மாநில அமைச்சரவையின் ஆலோசனையைக் கேட்க வேண்டிய அவசியம், ஆளுநருக்கு இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

இது, டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட டெல்லி மாநில அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ