Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கர்நாடகாவில் கோயில் அர்ச்சகர்களான தலித் பெண்கள்!

ர்நாடக மாநிலத்தில் இரு தலித் பெண்கள் கோயில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் மங்களுரு அருகே குட்ரோலி என்ற இடத்தில் கோகர் நாத நாதேஸ்வரா கோயில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோயில் ஆன்மீக குருவான நாராயண குருவால் எழுப்பட்டது .சிவன் பிரதான கடவுள்.  இந்த கோயிலில் கடந்த ஆண்டு கணவரை இழந்த பெண்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை முதல், இரு தலித் பெண்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டு, பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

லக் ஷ்மி என்ற 65 வயது பெண்ணும் 45 வயது நிரம்பிய சிலிம்பி என்ற பெண்ணும்  இங்கு, அர்ச்சகர் பணியில் ஈடுபடுகின்றனர்.  கருவறைக்குள் சென்று சாமிக்கு பூஜைகளை மேற்கொள்கின்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குகின்றனர். ஆண் அர்ச்சகர்கள் மேற்கொள்ளும் அத்தனைப் பணிகளையும் இவர்களும் மேற்கொள்கின்றனர். அர்ச்சகராக நியமிக்கப்பட்ட  லக் ஷ்மி , தனது பணி குறித்து பெருமிதம் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த கோவில் நிர்வாகத்தில் காங்கிரஸ் தலைவர்களுல் ஒருவரான ஜனார்த்தன பூஜாரி உள்ளார். அவரது முயற்சியின் கீழ்தான், கோயிலில் கணவனை இழந்த பெண்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர். தற்போது தலித் பெண்களும் அர்ச்சகர் ஆகியுள்ளனர். இது குறித்து ஜனார்த்தன ரெட்டி கூறுகையில், ''தலித்துகளும் கடவுளின் குழந்தைகள். அவர்களுக்கு கடவுளிடத்தில் அனைத்து உரிமையும் இருக்கிறது. தலித் பெண்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டதற்கு அர்த்தம் இதுதான் '' என்றார்.


 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ