Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விடுதலை முடிவு குறித்து எங்களுடன் விவாதிக்கவில்லை - இரோம் ஷர்மிளா சகோதரர்

யுதப் படை சிறப்பு அதிகார சட்டத்திற்கு எதிராக கடந்த 16 வருடங்களாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மணிப்பூரைச் சேர்ந்த ஐரோம் சர்மிளா,  தன் உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டு தேர்தலில்  களம் காணப்போவதாக அறிவித்துள்ளார். இந்தியாவின்  சுதந்திரத்திற்காக அகிம்சை வழியில்  போராட்டத்தை  மேற்கொண்ட  மகாத்மா காந்திக்கு  பிறகு  இரும்பு மங்கை  ஷர்மிளாவின்  போராட்டம் தான் நீண்ட நெடிய போராட்டம்.

"என்  உடல் தான்  என் ஆயுதம்"

2000-ம் ஆண்டு மணிப்பூரில் பேருந்துக்காக நின்றிருந்த10 அப்பாவி மக்களை ராணுவத்தின் ராஷ்ட்ரீய ரைஃபிள் படைப் பிரிவினர்,  கொடூரமாக சுட்டுக் கொன்றனர். இந்த கொலையை கண்டித்தும், மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்யக்கோரியும், ஷர்மிளா உண்ணாவிரதத்தை தொடங்கினார். "என்  உடல் தான்  என் ஆயுதம்" என்று  குரலை உயர்த்தியும் என் கோரிக்கைள் நிறைவேறும் வரை ஒரு துளி  நீரோ,உணவோ  அருந்த மாட்டேன்  தலையை முடிய மாட்டேன் என்றும் தீவிர போராட்டத்தை  நடத்தி வந்தார்.

போராட்டத்தை  ஒடுக்க  நினைத்த அரசு

அவரின் இந்த போராட்டத்தை ஒடுக்க முயற்சித்த அரசு இப்போராட்டத்தை தற்கொலை முயற்சி எனக் குற்றம்சாட்டி, அவரை மணிப்பூரில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துஅறிவியல் நிறுவனத்தில் சிறப்பு வார்டில் காவலில் வைத்து மூக்கு வழியாக வலுக்கட்டாயமாக திரவ உணவை வழங்கியது. அவர் மீது தற்கொலை முயற்சி வழக்கை  பதிவு செய்தது.  ஆனாலும் மனம் தளராமல் ஷர்மிளா தனது  போராட்டத்தை தொடர்ந்தார்.

முடிவுக்கு வந்ததா போராட்டம் ?

16 ஆண்டுகளாக  தனிமனித போராளியாக  தனது போராட்டத்தை  தொடர்ந்து வந்த ஷர்மிளா கடந்த ஜுலை 26-ஆம் தேதி நீதிமன்றத்தில் தனது போராட்டத்தை முடிவு கொண்டு வருவதாக அறிவித்தார். தனி மனிஷியாக போராடி வந்த  தமது கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கவில்லை எனவே தனது போராட்டத்தை வரும்  ஆகஸ்டு 9 ஆம் தேதி முடிவு கொண்டு வருவதாக தெரிவித்தார்.திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தேர்தலில் போட்டி இடப்போவதாகவும் அறிவித்தார்.  அவருடைய இந்த அறிவிப்பு  பலதரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் அரசியல் அதிகாரத்தின் முன்பு தனி மனிஷியாக  அவர் என்ன செய்ய முடியும் என்ற கேள்வியையும் எழுப்பியது.

 

 விடுதலை முடிவு குறித்து எங்களுடன் விவாதிக்கவில்லை ஷர்மிளா சகோதரர்

ஷர்மிளாவின் இந்த முடிசு குறித்து அவரின்  சகோதரர் ஷிங்காஜித்திடம் பேசினோம்.  அவர், “அவரை  சந்திப்பதற்கு எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஜுலை 26 -ம் தேதிக்குப்பிறகு யாரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை.  நாளை காலை 11  மணிக்கு நீதிமன்றத்திறகு வருகிறார். அபோதுதான் தெரியும்  அவர் என்ன   சொல்வார்,  எங்கே  செல்வார் என்று.  அவருடைய  இந்த விடுதலை முடிவுக் குறித்து என்னிடம் எதுவும் விவாதிக்கவில்லை. அரசு  ஏதேனும் அழுத்தம்  கொடுத்ததா என்பது  குறித்து அவரிடம் பேசினால் தான் தெரியவரும் . அதேபோன்று அரசியலில் களமிறங்குவதாகவும் திருமணம்  செய்து கொள்ளப் போவதாகவும்   அறிவித்திருப்பது  குறித்தும்  நாளை  அவரிடம்   பேசினால்தான்  தெரியும்  அதுவரை காத்திருங்கள்...”  என்றார்.

-  கே புவனேஸ்வரி  

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ