Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அருணாச்சல் முன்னாள் முதல்வர் தற்கொலை..! பதவி பறிப்பால் நடந்த சோகம்

ருணாச்சல பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கலிகோ புல், இடாநகரில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி முதல் ஜுலை மாதம் வரை 4 மாதங்களுக்கு அருணாச்சல பிரதேச மாநில முதல்வராக கலிகோ புல் பதவி வகித்தார். அவருக்கு  12 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தது. பின்னர் அருணாச்சல பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் அவரது மர்ம மரணம் அருணாச்சல பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணையில் கலிகோ புல், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இளம் வயதிலேயே பெற்றோரை இழந்த கலிகோ புல், கார்பென்டர் வேலை பார்த்தார். வறுமையினால் பகலில் சிறு சிறு வேலைகளை செய்துகொண்டு, இரவு நேரப்பள்ளியில் படித்தவர்.

கல்லுரியில் படித்தபோது அவருக்கு அரசியல் ஆசை துளிர்விட்டது. கல்லுாரியின் யூனியன் தலைவராக இருந்தார். 1995ம் ஆண்டு  தீவிர அரசியலில் காலடி வைத்தார். காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றிய அவர், தனது  21 வருட அரசியல் வாழ்க்கையில் எம்.எல்.ஏ, அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளையும் வகித்தார்.

காங்கிரஸ் கட்சியின் அருணாச்சல பிரதேச மாநில நிர்வாகக் குழு உறுப்பினராக 13 ஆண்டுகளும்,  காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் குழு உறுப்பினராக 7 ஆண்டுகளும் பதவி வகித்தவர். புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் கொண்டவர். செஸ், பேட்மிண்டன் விளையாட்டுகளிலும் கலிகோ புல்லிற்கு ஆர்வம் அதிகம்.மானுடவியல் பட்டப்படிப்பு படித்ததாலோ என்னவோ சமூக சேவைப் பணிகளில் தம்மை அதிகம் ஈடுபடுத்திக் கொண்டவர்.

அண்மையில் ஏற்பட்ட உட்கட்சி குழப்பத்தால் முதலமைச்சர் பதவியிலிருந்து அவர் விலக நேரிட்டது. இதனால் அரசியலில் ஒதுங்கியிருந்தார்.  அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் முதலமைச்சர் நபம் துகி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close