Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாதச் சம்பளத்தில் குடியரசுத் தலைவரை மிஞ்சினர் எம்.எல்.ஏக்கள்!

ந்தியாவில் அதிகாரப் பதவிகளில் இருப்பவர்களில் குடியரசுத் தலைவருக்குத் தான் சம்பளம் அதிகம். குடியரசுத் தலைவர் மாதம் ஒன்றரை லட்சம் சம்பளமாகப் பெறுகிறார். குடியரசுத் துணைத் தலைவர் 1.25 லட்சம் சம்பளமும் மாநில ஆளுநர்கள் 1.10 லட்சமும் மாத சம்பளமாகப் பெறுகின்றனர்.

அண்மையில், மகாராஷ்டிரா மாநில சட்டசபையில் எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களுக்கு சம்பள உயர்வு அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதில், அந்த மாநில எம்.எல்.ஏக்களின் சம்பளம் குடியரசுத் தலைவரை விட உயர்ந்து விட்டது.

அதன்படி, மகாராஷ்டிரா மாநில முதல்வரின் மாதச் சம்பளம் இரண்டரை லட்சமாக உயர்ந்துள்ளது. அமைச்சர்களின் சம்பளம் 2.05 லட்சமாகவும் எம்.எல்.ஏக்களின் சம்பளம் 1.70 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அப்படிப் பார்த்தால், நாட்டின் உயர் பதவியான குடியரசுத் தலைவரின் மாதச் சம்பளத்தை விட மகாராஷ்டிரா மாநில எம்.எல்.ஏக்கள் இப்போது அதிக சம்பளம்  பெறுகிறார். ஆனால் அடிப்படைச் சம்பளம் உயர்த்தப்படவில்லை. அதற்கு பதிலாக படிகள் உள்ளிட்டவை அள்ளி வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவை பொறுத்தவரை அதிகச் சம்பளம் பெறும் முதல்வர்களில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முதலிடத்தில் உள்ளார். இவரது மாதச்சம்பளம் 4.21 லட்சம். இந்த மாநில எம்.எல்.ஏக்களின் மாத வருமானம் 2.21 லட்சம். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மாத சம்பளம் 2.40 லட்சம். இந்த மாநில எம்எல்ஏக்களின் மாத சம்பளம் 1.25 லட்சம்.

டெல்லி மாநிலத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 1.2 லட்சமும் அமைச்சர்கள் 1.2 லட்சமும் எம்.எல்.ஏக்கள் 88 ஆயிரமும் சம்பளமாக பெற்று வருகின்றனர். அண்மையில் அமைச்சர்களுக்கு 3.6 லட்சமாகவும் எம்.எல்.ஏக்களுக்கு 2.10 லட்சமாக சம்பளத்தை உயர்த்த டெல்லி சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் மத்திய அரசு அதற்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.

தமிழக முதல்வரின் சம்பளம் ஒரு லட்சம். எம்.எல்.ஏக்கள் ரூ.55 ஆயிரம் சம்பளமாக பெறுகின்றனர். இந்தியாவிலேயே குறைந்த மாத சம்பளம்  பெறுபவர்கள் பட்டியலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இருக்கிறார். இவரது மாத சம்பளம் ரூ.42 ஆயிரம்.
 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ