Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரு வாரத்திற்கு தேசியச் சின்னங்கள் முன் செல்ஃபி எடுக்கத் தடை!

புதுடெல்லி: சுதந்திர தினம் வருகின்ற 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தேசியச் சின்னங்கள் முன் செல்ஃபி எடுக்க, ஒரு வார காலத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

வருகின்ற 15-ம் தேதி, நாடு முழுவதும் சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக விமான நிலையம் உள்பட முக்கியமான பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி மத்திய உள்துறை அமைச்சகம், மாநில அரசுகளுக்கு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தேசியச் சின்னங்கள் முன்  செல்ஃபி எடுக்க, ஒரு வார காலத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாநில சுற்றுலாத் துறைக்கும், மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், 'வருகின்ற ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை, இந்தியாவின் தேசியச் சின்னங்கள் முன்பு சுற்றுலாப் பயணிகள் யாரும் செல்ஃபி எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டாம்' என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசியச் சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கைக் காரணமாகவே இந்த திடீர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close