Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆந்திரா: 32 தமிழர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!

திருப்பதி: செம்மரம் வெட்ட வந்ததாக, ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 32 தமிழர்களின் சார்பில், ஜாமீன் கோரி திருப்பதி நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

திருப்பதி சேஷாசல வனப்பகுதியில், செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றதாகக் கூறி, கடந்த ஆண்டு தமிழக தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர போலீசார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த சம்பவத்துக்கு பின் ஆந்திர அரசு, செம்மர கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவை ஏற்படுத்தி, வனப்பகுதியில் கண்காணிப்பு கேமரா மற்றும் ஆளில்லா விமானம் மூலம் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுத்து உள்ளது.

இந்நிலையில், கடந்த 4 ம் தேதி சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் கருடாத்ரி எக்ஸ்பிரஸ்  ரயிலில் வந்த தமிழர்கள் 32 பேரை, ஆந்திர மாநில போலீசார், செம்மரம் வெட்ட வந்துள்ளதாக கூறி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியதுடன் அவர்களுக்காக 2 வழக்கறிஞர்களையும் நியமித்து உள்ளார்.


இந்நிலையில், ஜாமீன் கோரி 32 பேரின் சார்பில் திருப்பதி 5-வது முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த ஜாமீன் மனுக்களை திருப்பதி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதை தொடர்ந்து, சித்தூர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ